பஹ்ரைனில் வன்முறை - 35 பேர் கைது
பஹ்ரைனில் இடம்பெற்றுவரும் வன்முறைகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பல எண்ணிக்கையிலான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
வீதிகளை மறித்தும் கார் போன்ற வாகனங்களைத் தீயிட்டு எரித்தும் உள்ளூர் பயங்கரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டதாக அந்நாட்டு உள்விவகாரத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்போது 35 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் பிரதான எதிரணிக் குழுவான அல்பைப் தெரிவித்துள்ளது. இதில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளதாக உள்விவகாரத் துறை அமைச்சின் அலுவலக அறிக்கை தெரிவிக்கின்றது.
மனாமாவின் புறநகரான சிரா மற்றும் சனாபிஸ் ஆகியவற்றில் மிக மோசமான வன்முறைகள் இடம்பெற்றன. பஹ்ரையினின் பிரதான வீதிகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளமையால் போக்குவத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. உள்விவகார அமைச்சினுள் உள்ளூர் உற்பத்தியான வெடிகுண்டுகள், கைக்குண்டுகள் என்பனவற்றுடன் நுழைந்த இளைஞர்களுக்கெதிராக கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பொலிஸார் வீசியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment