Header Ads



இலங்கையில் நித்திரையின்மையால் 30 இலட்சம் பேர் பாதிப்பு


(Sfm) இலங்கை சனத்தொகையில் 30 லட்சம் பேர் நித்திரையின்மை நோய் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. ரிச்வே அம்மையார் சிறார் மருத்துவமனையின் பணிப்பாளர் ரத்னசிறி ஹேவகேதெரிவித்தார்.
 
இதற்கு இரண்டு காரணங்கள் தாக்கம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார். தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் ஏதேனுமொரு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன.
 
அதேவேளை, பகலில் நல்ல தூக்கமோ அல்லது சில நிமிடங்களோ உறங்குபவர்களுக்கு இதய நோய் ஏற்பட கூடிய தன்மை குறைக்கப்படுகிறது.
 
உங்களுக்கோ, அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ நித்திரை வராத தருணத்தில் முதலில் உங்களது மருத்துவரை நாடி அது தொடர்பான விளக்கங்களை அளிக்க வேண்டும்.
 
நீங்களோ, அல்லது உங்கள் பிள்ளையோ உரிய வகையில் நித்திரை கொள்ளவிட்டால் அது அசாதாரண நிலைமையாக கருத வேண்டும்.
 
அது தற்போதைய ஒரு காரணியாக இல்லாத விட்டாலும், பிற்காலத்தில் பிறிதொரு நோயை தோற்றுவிக்கும் ஏதுநிலையாக அமையும் என்றும் ரிச்வே அம்மையார் சிறார் மருத்துவமனையின் பணிப்பாளர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்தார்.

1 comment:

  1. PLEASE TRY TO SEND THE BBS ALSO TO SPECIALIST THEY ARE SLEEPLESS NOW

    ReplyDelete

Powered by Blogger.