பௌத்த பிக்குவை கடத்திச்சென்று கொள்ளையடித்த 2 பௌத்த பிக்குகள்
(ஜெஸார்)
தேரர் ஒருவரிடமிருந்து 12 இலட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புத்தர் சிலைக்கான பாதுகாப்பு கூடாரம் அமைப்பதற்காக அன்பளிப்புக்களை சேகரித்துக்கொண்டிருந்த பிக்குவை கடத்திச் சென்று ரூபா 12 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுகேகொட விஜேராம பிரதேசததில் இந்த பிக்கு கடத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முற்சக்கர வண்டியொன்றில் வேறு மூன்று நபர்களுடன் இணைந்து அன்பளிப்புத் தேடிக்கொண்டிருந்த போது ஜீப் ஒன்றில் வந்த சிலர் அவரை கடத்திச்சென்றுள்ளனர்.
விஜேராம விகாரையொன்றுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பணத்தை பறித்ததாகவும் தெரியவருகிறது. இக்கொள்ளை நடவடிக்கைகளில் இரண்டு தேரர்களும் 5 பொது மகன்களும் ஈடுபட்டள்ளதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
தற்போது ஜீப் வண்டியையும் ஒரு சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாகவும் அவனிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் பிரகாரம் சந்தேக நபரான தேரர்களை தேடிச் சென்ற போது அவர்கள் இருவரும் குறித்த விகாரைகளில் இருந்து தப்பியோடிவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை மகரகம பொலிசார் மேற்கொள்கின்றனர்.
என்ன செய்வது கண்டிப்பாக இது பொது பலசேனவின் வேலையாகத்தான் இருக்கும்.. இவர்களின் அராஜகத்துக்கு ஒரு அளவேயில்லையா??? ஏன் அரசாங்கம் இவர்களை தட்டிக்கேட்காமல் இருக்கின்றது....
ReplyDeleteden saadula thama mankola kaarayoooo............ patta horun
ReplyDeleteஒருவேளை " மக்களை ஏமாற்றி பணம் வசூலித்த பிக்குவை போலீசில் ஒப்படைத்தோம்" என்று BBS நாளை அறிக்கை விடுமோ!!! அவங்க தானே "நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவற்றுறையினர்.
ReplyDelete.....
ReplyDelete