சிறைச்சாலைகளில் உள்ள 2 ஆயிரம் பேர் ஏ.எல்.பரீட்சையில் சித்தியடைந்தவர்கள்
(J.M.HAFEES)
கைதிகளின் உரிமைகளைப் பேணும் வகையில் வசதிகள் அதிகரிக்கப்பட்ட சிறைச்சாலைகள் உலகில் இலங்கையைத் தவிர வேறு எங்கும் கிடையாது என்று சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் சந்திரசிரி கஜதீர தெரிவித்தர். கண்டியில் வைத்து அவர் மேலும் தெரிவித்ததாவது.
193 வருடம் பழைமை வாய்ந்த கண்டி போகம்பறை சிறைச் சாலை நவீன வசதிகள் கொண்ட ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேபோல் யாழ்பாணம், நீர்கொழும்பு, காலி,மாத்தறை போன்ற இடங்களில் உள்ள சிரைச்சாலைகளும் மாற்றி அமைக்கப்படவுள்ளன.
இலங்கையைப் பொருத்தவரை ஒல்லாந்தர் காலத்தில் அவர்களது தேவைக்காகக் கட்டப் பட்ட சிறைச்சாலைகளே இன்னும் உள்ளன. எனவே கைதிகளது உரிமைகள் பற்றிய புதிய எண்ணக் கருக்ளுக்கு இசைவான சிறைச்சாலைகளாக அவற்றை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அந்த அடிப்படையில் முன்னர் பதுளையிலும் தற்போது கண்டியிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் ஏனைய சிறைகளிலும் இவ்வாறான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். கண்டி சிறைச் சாலையைப் பொருத்தவரை 193 வருடங்களுக்கு முன் கண்டியின் பிரதானியாக இருந்த மகா அதிகாரம் அவர்கள் தமது உத்தியோக பூர்வ காரியாலயத்தில் 53 கைதிகளை வைத்திருந்தார். அந்த இடமே கண்டி சிறைச் சாலையானது. அந்நிய ஆட்சியாளர்கள் தமது வசதிற் கேற்ப நகரங்களில் தமது சிறைக் கூடங்களை அமைத்திருந்தனர். தற்போது அவை ஒதுக்குப் புறங்களுக்கும் திறந்த வெளிகளுக்கும் எடுத்துச் செல்லப்படவேண்டுமெனத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட தற்போதைய தும்பறை சிறைச்சாலையில் பெண் கைதிகளின் நலன் பாதுகாக்கப் பல புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கற்பிணிக் கைதிகளாயின் அவர்களுக்கு விசேட பிரிவு உள்ளது. குழந்தைகளுடன் சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு முன்பள்ளி அல்லது சிறுவர் பாடசாலை சிறையினுள் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் விளையாடவென உள்ளக சிறுவர் பூங்கா, நூல் நிலையம் போன்றனவும் அமையப் பெற்றுள்ளன என்றார்.
புராதன பெருமை மிக்க போகம்பறை சிறைச் சாலை தேசிய மரபுரிமைகள் அமைச்சிடம் ஒப்படைக்கப் படும். அது தேசிய மரபுரிமைச் சொத்தாகப் பராமரிக்கப்படும்.
2011ம் ஆண்டு 118 000 பேர் சிறைக் கைதிகளாக இருந்தனர். அவர்களில் விடுதலையானவர்கள் 40 சதவீதத்தினர் மீண்டும் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைக்கு மீண்டுள்ளனர்.
பிணைப் பணம் செலுத்த முடியாமலும், சிறிய அபராதங்களைக் கூட செலுத்த முடியாமல் சிறைக்கு வந்து சிறிது காலம் தண்டனை அனுபவித்து வெளியே செல்லும் கைதிகள் குற்றச் செயலில் நிபுணத்துவம் பெற்று வெளியேறுகின்றனர். காரணம் குற்றச் செயலில் கை நேர்ந்த கைதிகளின் அனுபவத்தை பகிர்ந்து கொளள் வசதியளிக்கிறது. எனவே இவ்விடயமாக மாற்றுத்திட்டம் தேவைப் படுகிறது.
கல்வி கற்கும் நிலையில் குற்றமிழைத்து கைதியாக வருபவர்களது கல்வியைத் தொடர வட்டருக்க என்ற இடத்தில் 19 மில்லியன் ரூபா செலவில் ஒரு சிறைச் சாலைப் பள்ளி அமைத்து உள்ளோம். 12000 புலிப் பயங்கரவாதிகளில் 344 பேர் தவிற மற்றவர்கள் அனைவரும் புனருத்தாபனம் செய்யப்பட்டு விட்டனர்.
தற்போது சிறைகளில் 4000 பேர் சாதாரண தரம் சித்தி அடைந்த வர்களும் 2000 பேர் உயர்தரம் சித்தி அடைந்த வர்களும் கைதிகளாக உள்ளனர். கைதிகளில் 40 வீதமானோர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றவர்கள். இப்படியான பலதரப் பட்டவர்களை சீர் திருத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது என்றார்.
Post a Comment