Header Ads



உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், ஆசிரிய ஆலோசகர்களுக்கும் 2நாள் கருத்தரங்கு

(எஸ்.எல். மன்சூர்)

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் முஸ்லீம் வலயக் கல்வி அலுவலங்களில் கடமையாற்றும் ஆரம்பக் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், ஆசிரிய ஆலோசகர்களுக்குமான இரண்டு நாள் பயிற்சிக் கருத்தரங்கு நேற்றும் இன்றும்; (மார்ச் 19, 20 ஆம்திகதிகளில்) திருகோணமலையிலுள்ள மாகாணக் கல்வி அலுவலகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடலில் ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்ரி. நிஸாம் பிரதம அதிதியாக் கலந்து கொண்டார். 

இந் நிகழ்வின்போது கிழக்கு மாகாணத்தில் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களும், இவ்வாண்டு மேற்கொள்ளவுள்ள வேலைத் திட்டங்களும்,  பகிரப்பட்டதுடன், எதிர்காலத்தில் ஆரம்பக்கல்விக்கான மேம்பாட்டுத் திட்டங்கள், அது மேற்கொள்ளப்படவேண்டிய முறைகள், வலயக் கல்வி அலுவலகங்களினால் முன்னெடுக்கப் படுவதன் அவசியப்பாடுகள் போன்றனவும் கலந்துரையாடப்பட்டு இம்மாகாணத்திலுள்ள அனைத்து ஆரம்பக்கல்வி பாடசாலைகளும் பிள்ளைநேயப் பாடசாலைகளாக மாற்றம் பெற்று, ஆரம்பக் கல்வி எதிர்காலத்திற்கான சிரேஸ்ட இடைநிலைக் கல்விக்கான அத்திவாரமாக அமைவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என்கிற விடயங்களும் இடம்பெற்றன.

இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று, கல்குடா, மட்டக்களப்பு, மட்;;டக்களப்பு மத்தி, பட்டிருப்பு, திருக்கோவில், கிண்ணியா, மூதூர், கல்முனை, சம்மாந்துரை போன்ற வலயத்திலிருந்து ஆரம்பக் கல்விகான உதவிக் கல்விப் பணிப்பாளர்களும், ஆசிரிய ஆலோசகர்களும்  கலந்து கொண்டதுடன் இறுதிநாள் நிகழ்வில் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ். மனோகரன் அவர்களும் கலந்து கொண்டார். 



.

No comments

Powered by Blogger.