ராஜபக்ஸ விமான நிலையத்தை அமைக்க பெற்ற கடனை 26 வருடங்கள் செலுத்துவேண்டும்
(மொஹொமட் ஆஸிக்)
மத்தளை ராஜபக்ஸ விமான நிலையத்தை நிர்மானிப்பதற்காக பெற்ற கடனை 26 வருடங்கள செலுத்த வெண்டும் என கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்டை யில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்
மறைந்த முன்னால் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.ஸீ.எஸ். ஹமீத் அவர்கள் ஆரம்பித்த ஹாரிஸ்பத்துவ பவுன்டேஷன் மூலம் வரிய குடும்பங்களை சேர்ந்த 800 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள வழங்கும் நிகழ்வில் ஒரு அங்கமாக இவ் வைபவம் இடம் பெற்றது.
இங்கு மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் இவ்வாரும் தெரிவத்தார்.
இன்று கல்வியைப் பற்றி அரசு சிந்திப்பது இல்லை. நடக்கின்ற அனைத்து பரீட்சையிகளிலும் குழப்பம் எற்படுத்துகின்றனர். வரிய மாணவர்களுக்கு கல்வியை தொடர முடியாதுள்ளது. நாட்டின கடன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. மத்தளையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்திற்காக பெற்ற கடனை 26 வருடங்கள் வரை செலுத்த வேண்டும். இதற்காக இன் நாட்டு வரிய மக்கள் செலுத்தும் வரியே பயன்படுத்தப்படவுள்ளது. பாதைகளை செப்பனிடுவது மூலம ஒரு பகுதியினர் நன்மை அடைந்து வருகின்றனர். என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சாபி உற்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
மகிந்த ராஜபக்ஸயும் அவரது குடும்பத்தினரும் நாடு முன்னேறவேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு ஒன்றும் செய்யவில்ல நாட்டிலுள்ளவைகளை அபகரித்து தமக்குள்ளாக்கவேண்டுமென்றுதான் செயற்படுகின்றார்கள்.
ReplyDeleteஇப்படிக்கடன் பட்டு நாட்டில் ஒரு விமான நிலையம் அமைக்கவேண்டிய அவசரமென்ன, தற்போதைய அவசியமென்ன இதற்குரிய கடன்களை கட்டிமுடிக்க நாட்டுமக்கள் நாங்கள் எவ்வளவு கஸ்டப்படவேண்டியுள்ளது எங்களால் வாழ்க்கைச்செலவுகளின் சுமையை தாங்கமுடியாது, இப்படியிருக்கும் நிலைமைகளில் அரசாங்க குடும்பத்தின் சொந்த இலாபங்களுக்காக அடிக்கடி நாட்டில் கிறீஸ் மனிதர்களின் வருகை, பொதுபலசேன போன்ற பயஙகரவாதக்குளுக்களின் வருகை அத்துடன் நாளை இன்னும் என்ன யாருக்கெதிராக் என்ன தீவிர திட்டங்களை வைத்துள்ளார்கள் என்பதை அவர்களே அறிவார்கள்.
ஆக நாட்டு மக்கள் யுத்தம் இருந்தகாலத்தில் யுத்தம் மட்டும்தான் இருந்தது ஆனால் இப்படியொரு சீர்கெட்ட சூழ்நிலையும் வாழ்வதற்கு கஸ்டமான நிலையுமிருக்கவில்லை, இந்த நிலைமை இனிமேலாவது மாறவேண்டும் அதற்குரிய பங்களிப்பை இன்னாட்டிலுள்ள் ஒவ்வொருவரும் முயற்சிப்போம். நமது நாட்டை கொள்ளைகாரர்களிடமிருந்து காப்பாற்றுவோம். சகோதரர்களே,சகோதரிகளே,பெரியோர்களே இணையுங்கள் ஓர்கரமாய், தீயவர்களின் கொடுங்கோலாட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம், நாளையென்று எண்ணி தூரமாக்கி விடவேண்டாம் இவர்கெளுக்கெதிராக நாம் தொடுக்கப்போகும் கணைகளையும் இவர்களுக்கெதிராக நாம் பிடிக்கப்போகும் எதிர்ப்புக்கொடிகளையும்.
நாட்டில் இன்னுமொரு யுத்தம் வேண்டாம் ஆனால் இவர்களது கொடூரச்செயல்களுக்கும் கொடுங்கோலாட்சிக்கும் முற்றுப்புள்ளி வைப்பதுதான் நமது நோக்கமாக இருக்கவேண்டும் புறப்படுங்கள் வெற்றி நிச்சயம்.