எகிப்தில் கால்பந்து கலவரம் - 21 பேருக்கான மரணதண்டனை மீண்டும் உறுதியானது
எகிப்தின் போர்ட் செட் என்ற இடத்தில், கடந்த 2012 பிப்ரவரி மாதம் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில் அல்-மஸ்ரி-அல்-அஹ்லி அணிகள் மோதின. போட்டியின் முடிவில், மைதானத்தில் இருந்த 13 ஆயிரம் அல்-மஸ்ரி ரசிகர்கள், குறைந்த அளவில் (1,200 பேர்) திரண்டிருந்த அல்-அஹ்லி அணியின் வீரர்கள், ரசிகர்கள் மீது, கற்கள், ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர்.
இதில் 74 பேர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து கெய்ரோவில் நடந்த கலவரத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்த விசாரணையில் 21 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் கலவரம் ஏற்பட்டதில் 40 பேர் பலியாகினர். இதனிடையே, குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, நேற்று எகிப்து கோர்ட் உறுதி செய்தது.
தவிர, நகரின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் ஈசாம் சமக்கிற்கு ஆயுள் தண்டனை (15 ஆண்டு) வழங்கியது.
Post a Comment