Header Ads



சீனாவில் இஸ்லாமிய பிரச்சார பணியில் ஈடுபட்ட 20 பேருக்கு ஆயுள் தண்டனை



துர்க்மெனிஸ்தான் நாட்டையொட்டிய, சீனாவின், சின்ஜியாங் மாகாணத்தில், உய்குர் இனத்தைச் சேர்ந்த, சிலர் குடியேறினர். அவர்கள், அங்கு இஸ்லாமிய மதம் குறித்து பிரசாரம், பிரிவினை வாதம், தனி நாடு கோஷம் ஆகியவற்றை செய்து வந்ததாக, புகார் எழுந்தது. இதையடுத்து, அவர்களில், 20 பேரை, போலீசார் கைது செய்து, அவர்கள் மீது பிரிவினைவாதம், நாட்டை துண்டாட சதித்திட்டம் தீட்டுதல் போன்ற, பல வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள், மத பிரசாரம் செய்வதற்காக, பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், டி.வி.டி.,க்கள் என, பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள், துர்க்மெனிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது, விசாரணையில் தெரிய வந்தது. இவ்வழக்கை விசாரித்த, நீதிமன்றம் அவர்கள், 20 பேருக்கும், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.