Header Ads



2013ம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த அரபுகள்



ஒரு முன்ணணி வணிக பத்திரிகையில் வெளியாகியுள்ள 2013ம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த அரபுகள் பட்டியலில் பல ஆச்சரியங்கள் உள்ளன. 

அரபுலகில் வெளியாகும் அரேபியன் பிஸினஸ் எனும் வர்த்தக இதழ் வருடா வருடம் சக்தி வாய்ந்த அரபுகள் பட்டியலை வெளியிடும். இவ்வாண்டு வெளியாகியுள்ள பட்டியலில் கடந்த 9 வருடங்களாக முதல் இடத்தை பிடித்திருந்த கிங்டம் ஹோல்டிங் குழும தலைவரும் சவுதியின் இளவரசருமான அல் வலீத்தே முதலிடம் பிடித்துள்ளார். சிட்டி வங்கி மற்றும் ட்விட்டரில் குறிப்பிடத்தக்க ஷேர்களை அல் வலீத் வைத்துள்ளார்.

அல் வலீதை தொடர்ந்து எமிரேட்ஸ் ஏர்வேஸ், எமிரேட்ஸ் என்பிடி வங்கி, துபாய் வேர்ல்டு நிறுவனங்களின் தலைவரான ஷேக் அஹ்மத் பின் சயீத்தும் லண்டன் ஒலிம்பிக்கில் கடந்த ஆண்டு இரண்டு தங்க பதக்கங்களை வென்ற சோமாலியாவை பூர்வீகமாக கொண்ட மோ பராவும் இடம் பிடித்துள்ளார். 

உலகின் மிக உயரமான கட்டிடத்தை கட்டிய எம்மார் குழும தலைவரான முஹமது அல் அப்பார் நான்காம் இடத்தையும் ட்விட்டரின் துணை தலைவரான மஸேன் ரவாஸ்தேஹு ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இவ்வாண்டு வெளியாகியுள்ள 500 நபர்கள் பட்டியலில் 155 பேர் இப்பட்டியலுக்கு புதியவர்கள் என்பதும் அதிகபட்சமாக இவ்வாண்டு 155 பெண்களும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். பெண்களில் முதலாவதாக அமீரக அமைச்சர் ஷேக்னா லுப்னா 12ம் இடத்தில் உள்ளார். அமீரகத்தில் வசிப்பவர்களில் 102 நபர்கள் அதிகபட்சமாக இப்பட்டியலில் இருந்தாலும் சவூதியை பூர்வீகமாக கொண்டவர்கள் தான் அதிகபட்சம் 84 நபர்கள் இப்பட்டியலில் உள்ளனர்.inneram

1 comment:

  1. இஸ்லாம் எதிர்பார்க்கின்ற சகோதரத்துவ எம்மிடம் உள்ளது.அதனால் தான் எங்காவது ஒரு முஸ்லிமைப் பற்றிய நல்ல செய்தி கிடைத்தால் சந்தோசப்படுகின்றோம். அவர்களுக்கு ஏதாவது இன்னல் என்றால் கவலையடைகின்றோம் துஆ கேட்கின்றோம்.
    ஆனால், அரபுலகின் பணக்காரர்களும் புரூணை சுல்தான போன்றவர்களும் எந்தளவுக்கு இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றார்கள். அவர்களில் எத்தனை பேர் வட்டியிலிருந்து விடுபட்டுள்ளார்கள் என்பது கேள்விக் குறியே!
    உதாரணமா புரூணை சுல்தானின் வீண் விரயங்களையும் தங்கப் பாவனையையும் இஸ்லாம் அங்கீகரிக்குமா?
    எமது நாட்டில் உள்ள எடிசலாட் டயலொக் போன்ற நிறுவனங்கள் முஸ்லிம்களுடையவையாக இருக்க முடியும் எனினும் இஸ்லாத்துக்கு முரணான எத்தனையோ செயற்பாடுகளை முன்னெடுகின்றன.
    இதே போன்ற ஏராளமான நிகழ்வுகள் வரலாற்றிலும் காணப்படுகின்றன. ஷாஜஹான் கட்டிய தாஜமஹால் இஸ்லாமியக் கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டிருக்க முடியும் எனினும் அது இஸ்லாமியச் சின்னமாக முடியுமா?
    அக்பர் இந்தியாவை ஆண்டார் என்கிறோம்.அவர் இஸ்லாத்துக்கு மாற்றமாக தீனே இலபஹியை உருவாக்கினார் அல்லவா?
    எனவே இந்த இடத்தில் முஸிம் பெயர்களை மாததிரம் ஒன்றை விரும்புவது பொருத்தமானதன்று. மாறாக முஸ்லிமாக இருந்தாலும் அந்நியரகளாக இருந்தாலும் அவர்களது செய்யும் செயல்களைப் பார்த்து அதற்கு ஆதரவு வழங்க வேண்டும். அவ்வாறில்லாமல் அவர் முஸ்லிம் என்பவதற்கான மாததிரம் அவரை செயலை நியாயப்படுத்துவோமாயின் அது நிச்சயமாக இனவாதமாகவே அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.