குளிர்பானங்களை அருந்துவதால் ஆண்டு தோறும், 1.8 லட்சம் பேர் இறப்பு
சர்க்கரை பொருட்கள் கலந்த குளிர்பானங்களை அருந்துவதால், ஆண்டு தோறும், 1.8 லட்சம் பேர் இறப்பதாக, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின், நியூ ஆர்லியன்ஸ் நகரில், குளிர்பானங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் குழுவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதாஞ்சலி சிங், இதுகுறித்து கூறியதாவது,
சர்க்கரை பொருட்கள் கலந்த குளிர்பானங்களை அருந்துவதால், எடை அதிகரிக்கிறது.
இதனால், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. கடந்த, 2010ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, குளிர்பானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்களில், 1.3 லட்சம் பேர் சர்க்கரை நோயாலும், 44 ஆயிரம் பேர் இதய நோயாலும், 6,000 பேர் புற்றுநோயாலும் இறந்தது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும், குளிர்பானங்களை அருந்திய, 25 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
உலகில், அதிக அளவில் குளிர்பானங்கள் அருந்துபவர்கள், மெக்சிகோ நாட்டினர்.
இந்த நாட்டில், 10 லட்சம் பேரில், 318 பேர், குளிர்பானங்களால் இறக்கின்றனர். குறைந்த அளவில் குளிர்பானம் அருந்தும் ஜப்பான் நாட்டு மக்களில், 10 லட்சம் பேரில், 10 பேர் மட்டுமே, இறக்கின்றனர். இவ்வாறு, கீதாஞ்சலி கூறினார்.
Post a Comment