அசுத்தமான தண்ணீரால் உலக அளவில் தினமும் 1800 குழந்தைகள் உயிரிழக்கின்றனர்:
1993-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொது அவை மார்ச் 22-ம் தேதியை உலக தண்ணீர்
தினமாக அறிவித்தது. இன்று இந்த தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கும் நிலையில் ஐக்கிய
நாடுகளின் குழந்தைகளுக்கான நிதி நிறுவனமான யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டு
உள்ளது.
உலக அளவில் ஒருநாளைக்கு 5 வயதுக்குட்பட்ட 2000 குழந்தைகள் இறக்கின்றனர்.
இவர்களில் 1800 குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறக்கின்றனர். அசுத்தமான தண்ணீரும்,
சுகாதாரமற்ற சூழ்நிலையுமே இதற்கு காரணமாகும் என்று அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிசெப் தலைவர் சஞ்சய் விஜேசேகர கூறியதாவது,
குழந்தைகள் பள்ளிப்பேருந்து விபத்துக்குள்ளாகி அனைத்துக் குழந்தைகளும் இறந்து
போனால், அதுவும் தினமும் நடைபெற்றால் மட்டுமே நாம் அதனை கவனத்தில் கொள்வோம். ஆனால்
அசுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலையால் இந்த இறப்புகள் ஒவ்வொரு நாளும்
உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இதை யாரும் கண்டுகொள்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment