நெல் அறுவடை இயந்திரத்தினுள் சிக்குன்டு 15 வயது சிறுவன் பரிதாப வபாத்
ஹொரவ்பொத்தனை, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுவன் நெல் அறுவடை இயந்திரத்தினுள் சிக்குன்டு மரணமடைந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிழிந்த சிறுவன் முக்றவௌ பகுதியைச்சேர்ந்த, ஹொரவ்பொத்தானை முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 09ம் ஆண்டில் கல்வி பயிலும் றஸாக் றுஸ்கின் என தெரியவருகின்றது.
தனது வீட்டுக்கு பக்கத்து வீட்டு உறவினர்களின் நெல் அருவடை செய்வதற்காக விடுமுறை தினத்தில் உதவி செய்யும் நோக்கில் சென்று சுனாமி என்றழைக்கப்படும் நெல் அறுவடை இயந்திரத்தின் மூலம் நெல் வெளியாகும் பகுதியை நோக்கி பேக் பிடித்துக்கொண்டிருந்த போதே இயந்திரத்தின் பட்டி உடம்புடன் ஒட்டியதினாலேயே இச்சம்பவம் நடந்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் பொலிஸ் விசாரணையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment