Header Ads



ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்து 10 வருடங்கள்





ஈராக்கில் சதாம் உசைனை அகற்றுவதற்காக கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் 20-ம்தேதி அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை போரை தொடங்கியது. இந்த போரில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டது. சதாம் உசேன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்த போர் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இன்று தலைநகர்  பாக்தாத்தில் பரபரப்பான மார்க்கெட்டில் கார்குண்டு வெடித்தது. பாக்தாத்தின் தெற்கு பகுதியில் நகரில் போலீஸ் தளம் மீது தற்கொலைப்படைவாதி ஒருவர், டிரக்கினால் மோதி வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதல்களில் குறைந்தபட்சம் 50 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 160 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


2003-ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு துவங்கியதிற்கு பிறகு 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,12,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈராக் பாடி கவுண்ட்(ஐ.பி.சி) என்று குழு தயாரித்த அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கை இதுவரை கிடைத்த விபரம் என்றும், முழுமையான ஆவணங்கள் கிடைக்கும் பொழுது இறந்தவர்களின் எண்ணிக்கை 1,74,000 ஆக அதிகரிக்கும் என்றும் லண்டனை மையமாக கொண்டு இயங்கும் ஐ.பி.சி கூறுகிறது.

வரலாற்றில் இதுவரை இல்லாத கூட்டுப்படுகொலை ஈராக்கில் நடந்துள்ளது. ஆக்கிரமிப்பு துவங்கிய ஆண்டுகளில் துல்லியமான விபரங்கள் கிடைத்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்று ஐ.பி.சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈராக்கின் தலைநகரான பாக்தாதில்தான் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

3 comments:

  1. ஈராக்கை ஆக்கிரமிக்க அமெரிக்கா சொல்லிய முக்கிய காரணம் "ஈராகிடம் அணு ஆயுதம் உண்டு அதைக் களைய வேண்டும்." இந்தச் சாக்கு எல்லோரும் அறிந்த அப்பட்டமான பொய். அணு ஆயுதங்கள் உள்ள நாடுகளில் அணு ஆயுதத்தை பாவித்துள்ள ஒரே நாடு அமெரிக்கா. களைவதாயின் அவர்களிடம் இருந்து தான் ஆயுதங்களைக் களைய வேண்டும். ஆனால் அவர்களுக்கு எதிராக யாரும் பேசியதாய் இல்லை. உலகை ஏமாற்ற அவர்கள் (அமெரிக்க, மேற்குலக) செல்லப் பிள்ளையான ஈரானை இன்றுவரை போலியாக மிரட்டி வருகிறது. ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை. இதைத் தான் முஸ்லிம்களாகிய நாம் கவனிக்க வேண்டியது. ஈரானுடைய செல்வாக்காலையே இன்று வரை ஈராக் சுடு காடாய் இருக்கிறது. மக்களைக் கொல்லும் இயக்கங்களுக்கு பணத்தைக் கொட்டும் நாடுகளில் முன்னிலையில் உள்ள நாடு ஈரான். சஹாபாக்களையே திட்டித் தீர்க்கும் இவர்களுக்கு முஸ்லிம்கள் எம்மாத்திரம். எதையும் ஆழமாக சிந்திக்காத நமது மக்கள் ஈரானை "முஸ்லிம் நாடாக " நினைப்பது தான் மன வேதனை. அவர்கள் யூதர்களின் தயாரிப்பு என்பதை உணர்வதாய் இல்லை. நன்றாகப் பேசி விட்டால் சட்டென்று முடிவெடுப்பது.. நம்மை நம்ப வைக்கும் நாடகத்தை அவர்கள் அரங்கேற்றினால் உடனே நம்பி விடுவது. நான் தெரியாமல் தான் கேட்கிறேன்;
    1. அமெரிக்கா இது வரை ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?
    2. அமெரிக்காவை நோக்கி ஈரானிய இளசுகள் படை எடுப்பதும் அவர்களுக்கு அமெரிக்க நுழைய முஸ்லிம்கள் போலல்லாது பிரச்சினை இல்லாதிருப்பது எப்படி?
    3. ஈரான் எதிரி நாடென்றால் இன்று வரை ஈரான் ஜனாதிபதிக்கு அமெரிக்கா சென்று அங்குள்ள பல்கலைக் கழகங்களில் உரையாற்ற முடிவது எப்படி?

    யா அல்லாஹ், ஈராக் முதல் இலங்கை வரை முஸ்லிம் விரோத செயல்களைச் செய்யும் இது போன்ற நயவஞ்சகர்களிடம் இருந்து முஸ்லிம்களைக் காப்பாற்றுவாயாக..

    ReplyDelete

Powered by Blogger.