மாதம் 100 கோடி பார்வையாளர்கள் - யூ டியூப் சாதனை
ஒரு மாதத்தில், 100 கோடி பேர், "யூ டியூப்' இணையதளத்தை, பார்வையிடுவதாக, "கூகுள்' நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த, 2005ல், வீடியோ பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்து, உலகமெங்கும் உள்ள, "இன்டர்நெட்' பயன்பாட்டாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், "பேபால்' நிறுவன ஊழியர்களால், யூ டியூப் இணையதளம் உருவாக்கப்பட்டது.கடந்த, 2006ல், கூகுள் நிறுவனம், 9000 கோடி ரூபாய்க்கு,வாங்கிய பின், இந்த இணையதளத்துக்கு பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர்.
இதுகுறித்து, கூகுள் நிறுவனத்தின், துணை தலைவர் ராபர்ட் கிங்கிள் கூறியதாவது:தற்போது உள்ள ஊடகங்களில், மிகப்பெரிய சக்தியாக உள்ள, யூ டியூப் இணையதளத்துக்கு, மாதம், 100 கோடி பார்வையாளர்கள் உள்ளனர்.பேபால் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய போது, ஐந்து கோடி பேர், இதன் பார்வையாளர்களாக இருந்தனர்.மேலும், உலக அளவில் புகழ்பெற்ற சேனல்களை, யூ டியூபில் ஒளிபரப்ப, 1000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. எனினும், இது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகரமாக இல்லை.எதிர்காலத்தில், சேனல்களை ஒளிபரப்புவதிலும், யூ டியூப் வெற்றிபெறும்.இவ்வாறு, ராபர்ட் கூறினார்.
Post a Comment