Header Ads



மியன்மார் நாட்டினர் 100 பேர் நடுக்கடலில் மீட்பு


மியான்மர் (பர்மா) நாட்டிலிருந்து மும்பைக்கு  மக்கள் வருவதாக இந்தியக் கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்தமான் நிக்கோபாரைச் சேர்ந்த கப்பற்படையினர் வங்காள விரிகுடா கடற்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மியான்மரிலிருந்து வங்காள விரிகுடா கடல் மார்க்கமாக வந்த ஒரு பெரிய படகில், 108 பர்மா நாட்டை சேர்ந்தவர்கள் இருந்ததை கடற்படையினர் கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரும், கடந்த மாதம் 15-ம் தேதி அன்று பர்மாவிலிருந்து புறப்பட்டு, இந்த படகில் வந்திருக்கிறார்கள். 

வரும் வழியில் கடந்த ஒரு வாரமாக, அவர்கள் உணவின்றி தவித்து இருக்கின்றனர். இதனால் அவர்கள் உடலில் உணவுச்சத்தும், நீர்ச் சத்தும் இன்றி மெலிந்த நிலையில் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டிருக்கிறார்கள். இதில் 3 வயது குழந்தை இறந்துவிட, சடலத்தை கடலில் போட்டுள்ளனர். 

அவர்களைக் கண்டுபிடித்த கடற்படையினர், உணவின்றி தவித்த அனைவருக்கும் உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்தமான் நிகோபார் தீவில் உள்ள, திக்லிபூர் போலீஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் விரைவில் மியான்மருக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். 

1 comment:

  1. இந்திய முஸ்லிம் அமைப்புக்கள் இது பற்றி அரசிடம் மீள அனுப்பாது இருக்க வேண்டுகோள் விடுத்தால் நன்றாக இருக்கும். இத்தனை துன்பங்களை அனுபவித்து சொந்த மண்ணை விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வந்துள்ளார்கள் என்றால்.. கொஞ்சம் இரங்கலாமே..

    ReplyDelete

Powered by Blogger.