Header Ads



பொத்துவில் அல் - கலாம் முஸ்லீம் வித்தியாலயம் வெற்றிப்பாதையை நோக்கி..!


(அனாசமி)

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பொத்துவில் கோட்டத்திலுள்ள ஒரு பாடசாலை அல் கலாம் முஸ்லீம் வித்தியாலயமாகும். தரம் ஒன்றிலிருந்து உயர்தர வகுப்பு வரையிலான மாணவர்களைக் கொண்ட இப்பாடசாலையில் பல்வேறு பௌதீகவளப் பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை போன்றன காணப்பட்டாலும் அப்பாடசாலையின் கல்வி அடைவு மட்டம் பொத்துவில் பிரதேசத்தில் மாத்திரமன்றி அக்கரைப்பற்று வலயத்திலும் பேசும்படியாக காணப்படுகின்றமை விசேடமாகும். இதற்குஅங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களும், அதன் அதிபரும் காரணமாகின்றனர். அதேவேளை அப்பாடசாலையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அங்குள்ள பெற்றோர்களும் பாரிய பங்களிப்பினை செய்து வருகின்றனர். குறிப்பாக பாடசாலைக்கும் அச் சமூகத்திற்கும் நல்லதோர் தொடர்பு இருக்கின்றபோதுதான் அப்பாடசாலை அதன் நோக்கை அடைவதற்கு இலகுவாக இருக்கும். 

அந்த அடிப்படையில் அப்பாடசாலையில் கற்கும் ஒரு மாணவரின் பெற்றார் அப்பாடசாலையில் நீண்டகாலமாக காணப்பட்டுவந்த நீர் நிறைந்து பள்ளமாக காட்சியளித்துக் கொண்டிருந்த ஒரு பரந்த பிரதேசத்தை தனது சொந்தச் செலவில் மண்ணிட்டு பள்ளத்தை மூடுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். பொத்துவிலைச் சேர்ந்த ஏ.எம். றபீக் என்பவரே இந்த முயற்சியில் ஈடுபட்டு எல்லோரினதும் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். பாடசாலைக்கான விளையாட்டு மைதானம் இருந்தும் அது நீரில் அமிழ்ந்துள்ளதன் காரணமாக மாணவர்களின் விளையாட்டுத் திறமையை வெளிக்காட்டுவதற்கு பெரும் தடையாக இருந்துவந்தது. இதனைக் கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களைக் அழைத்து நிலைமையை விளக்கினார் அதிபர். இந்த றபீக் அவர்கள் தன்னால் இந்த மாணவர்களுக்காகவும், இப்பாடசாலைக்காகவும் இதனைச் செய்து தருகின்றேன் என்று கூறி செயலிலும் இறங்கினார். தற்போது அந்த இடத்தில் மண் கொட்டப்படு வருகின்றமை பாராட்டுக்குரிய விடயமாகும். இவரின் செயலை அச்சமூம் நன்றியுடன் பார்க்கின்றனர்.

அதவேளை இங்கு கற்கின்ற மாணவர்களின் வகுப்பறைகள் அடைக்கப்படாது தகட்டுக் கொட்டில்களுக்கு மத்தியில் காணப்பட்டாலும் அங்குள்ள ஆசிரியர்கள் தியாக மனப்பான்மையுடன் கற்பித்து வருகின்றனர். கடந்த வருடத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கபொ.த.சாதாரண தரம் போன்றவற்றில் மாணவர்களது அடைவுகள் அதிகரித்துக் காணப்படுவதற்கு இங்குள்ள ஆசிரியர்களின் விடா முயற்சி, அர்ப்பணிப்பு கால்கோளாய் அமைந்திருந்தன. இப்பாடசாலையின் அதிபராக என்.கே.அப்துல் கரீம்  நியமிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலையின் கற்றற் செயற்பாடுகள் மாத்திரமன்றி ஏனைய விருத்திகளிலும் இப்பாடசாலை அபிவிருத்தி கண்டு வருவது பாராட்டுக்குரியது என்றும் பொத்துவில் கல்விச் சமூகம்; பாராட்டுகின்றது. தற்போது ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருந்தாலும் மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயற்பட்டு வருவதாக பாடசாலையின் அதிபர் என்.கே. அப்துல் கரீம் தெரிவித்தார். இதுபோன்ற செயற்பாடுகளில் சமூகத்தில்  காணப்படும் பரோபகாரிகள் பாடசாலைகளுக்கு உதவுவார்களாயின் கல்விச் சமூகம் நிறைந்த பயனை அடையும் என்பதற்கு பொத்துவில் அல்கலாம் வித்தியாலயம் நல்லதோர் உதாரணமாகும்.

2 comments:

  1. as an old student i am really happy to hear this news, because i am in a good position in a good company, because of the basic knowledge i got from here in this school.

    ReplyDelete
  2. சிறப்பாக விருத்தி அடைய என் மனப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்... (soon we will meet you)

    ReplyDelete

Powered by Blogger.