பிளாஸ்டிக் கழிவில் தயாராகும் டீசலை கொண்டு விமானம் ஓட்ட திட்டம்
உயர்ரக பெட்ரோல் மூலம் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் டீசல் மூலம் விமானத்தை இயக்க ஒரு விமானி திட்டமிட்டுள்ளார். அவரது பெயர் ஜெரிமி ரவுசல் (41).
இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். எதற்கும் பயன்படாத மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவில் இருந்து டீசல் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக 5டன் பிளாஸ் டிக் கழிவு பொருட்களை பல நாடுகளில் இருந்து சேகரித்துள்ளார்.
அதில் இருந்து 1000 காலன் திறன் கொண்ட டீசல் தயாரிக்கிறார். அதன் மூலம் வருகிற ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானத்தை இயக்க உள்ளார். அதன் தூரம் 16,898 கி.மீட்டர் ஆகும்.
Post a Comment