சூடானில் பழங்குடி மக்களிடையே மோதல்
ஆப்பிரிக்கா நாடான சூடானின் மேற்கு தர்பார் பகுதி தங்கச்சுரங்கம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது தொடர்பாக பானி ஹூசைன் மற்றும் ரிசைகாட் பழங்குடியினர்களிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இங்குள்ள ஆயுதம் ஏந்திய இந்த பழங்குடியினரிடையே கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து கடும் சண்டை நடந்து வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 1,00,000 பேர் அகதிகளாகியுள்ளனர். சில மாதங்களாக தீவிரமடைந்த இந்த சண்டையை முடிக்க ஒப்பந்தமும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் வாகனங்கள், ஒட்டகங்களில் ஆயுதங்களுடன் சென்ற ஒரு கும்பல் எல்சிரீப் என்னுமிடத்தில் மற்ற பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தியது.
Post a Comment