'பௌத்த ஆணைக்குழு யோசனைகளை எல்லை நிர்ணயிப்பின் போது கருத்தில் கொள்க'
1959ம் ஆண்டு பௌத்த ஆணைக்குழுவின் யோசனைகளை புதிய எல்லை மீள்நிர்ணயிப்பின் போது கருத்தில் கொள்ள வேண்டும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.எல்லை மீள்நிர்ணயிப்புக்கான தேசிய ஆணைக்குழுவிடம் யோசனைகளை வழங்கிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளை மீள நிர்ணயிக்கும் புதிய சட்டத்தின் கீழ் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய எல்லை மீள்நிர்ணயிப்பின் போது, மதம் மற்றும் மக்களின் இனம் போன்றவை குறித்து அவதானம் செலுத்தப்பட கூடாது என்றும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை தேசிய ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த வாரம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. gtn
வட கிழக்குக்கு வெலியே இருக்கும் சிரு பான்மை மக்கலின் அதிகாரத்தின் கீழுல்ல உல்லூராட்சி மன்ரங்கலின் நிலை என்னவாகும்? உதாரணத்திடற்கு எமது பேருவலை? பெரும்பாண்மை சினங்கலப் பகுதி சேர்க்கப்பட்டு அதிகாரம் கைமாரும் நிலை வருமா? ரவ்ப் ஹகீம் அநர்கலே அப்படியானால் டூதேர்ட் எடுத்துக் கொடுத்த நீங்கல் தான் சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டி வரும்.
ReplyDelete