Header Ads



ஹலால் என்றால் என்ன..? மல்வத்து பீட மஹாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர்


முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்கும், மல்வத்து பீட மஹாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரருக்குமிடையே இன்று சனிக்கிழமை கண்டியில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பு குறித்து முஸ்லிம் கவுன்சில் தலைவர்  ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய தகவல்கள் வருமாறு,

அண்மைய காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு பல நெரக்கடிகள் ஏற்பட்டபின்னர் முஸ்லிம்கள் தரப்பில் நாம் பலதரப்பினரை சந்தித்து கலந்துரையாடி வருகிறோம் இதில் குறிப்பிடத்தக்க ஆரோக்கியமான சந்திப்பாக மல்வத்து பீட மஹாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரருடனான சந்திப்பு அமைந்திருந்தது. தன்னை முஸ்லிம் பிரதிநிதிகள் வந்து சந்தித்ததமை குறித்து அவர் மகிழிவடைந்தார். நூற்றாண்டுகளாக நீடிக்கும் சிங்கள - முஸ்லிம் உறவு குறித்து அவர் சிலாகித்து பேசினார்.

தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் நெருக்கடிகள் குறித்து முஸ்லிம் பிரதிநிதிகள் அவருக்கு தெளிவாக விளக்கினோம். இந்த நெருக்குவாரங்களை குறைக்க பௌத்த உயர்பீடத் தலைவரென்ற வகையில் மல்வத்து பீட மஹாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தோம்.

அவர் இதுதொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமாக பதிலுரைத்தார் (தேரர் கூறிய சில விடயங்கள் இங்கு சில காரணங்களுக்காக தவிர்க்கப்படுகின்றன) சிங்கள - முஸ்லிம் ஒற்றுமைக்கு பங்களிப்பு வழங்கப்படுமென உறுதியளித்தார். ஹலால் என்றால் என்னவென்று அவர் கேள்வியெழுப்பினார். இதன்போது முஸ்லிம் பிரதிநிதிகள் ஹலால் பற்றிய பூரண விளக்கத்தை மல்வத்து பீட மஹாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரருக்கு விளக்கினர். இந்த விளக்கத்தில் அவர் திருப்தி கண்டார்.

அத்துடன் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் சான்றிதழ் வழங்குவதென்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின்  தீர்மானத்தை அவர் பெரிதும் வரவேற்றார். இது இருசமூகங்களுக்கும் இடையிலான நெருக்கடிகளை தணிக்க உதவுமென்பதும் அவரின் வாதமாக காணப்பட்டது எனவும் அமீன் மேலும் குறிப்பிட்டார்.


மஹாநாயக்க தேரருடனான இச்சந்திப்பில் முஸ்லிம் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டமை இங்கு கவனிக்கத்தக்கது.

3 comments:

  1. Next time visit time take with buriyani food then they forgot everything!

    ReplyDelete
  2. தம்பி சிந்து பிந்து, இதுதானே வேணாங்கிறது!

    ReplyDelete
  3. நான் அடிக்கடி மனவேதனைப் படுவதுண்டு கி.பி. 754 காலப்பகுதியில் தென் மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவில் கிலாபத்தை ஏற்படுத்திய முகம்மது பின் காசிம் தென் இந்தியா வரை வந்தவர் அப்போது இலங்கைப் பகுதியை முக்கியத்துவமற்றது (காடு அல்லது கடல்)என்று திரும்பிவிட்டாராம். அவர் அவ்வாறு திரும்பாமல் கொஞ்சம் நகர்ந்து இலங்கைக்கும் வந்து போயிருந்தால் இந்தப் பிரச்சினையே முஸ்லிம்களுக்கு இருந்திருக்காது. (இலங்கை முழுவதும் 100 வீதம் முஸ்லிம்களாயிருந்திருப்பர்)

    ReplyDelete

Powered by Blogger.