இலங்கையில் ஆண்களை முந்திய பெண்கள்
இலங்கையில் பெண்கள் மற்றும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் மொத்த சனத்தொகையில் 51.5 வீதமானவர்கள் பெண்கள் என்று தெரியவந்துள்ளது.
ஆண்களின் எண்ணிக்கையைப் போன்றே 15 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை 2000ம் ஆண்டில் 9.2 வீதமாக இருந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டில் 12.2 வீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் சனத்தொகையில் 62 வீதமானோர் 15 இற்கும் 59 இற்கும் இடைப்பட்ட வயதினராக உள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் னத்தொகை வளர்ச்சி 0.7 வீதமாகவே உள்ளது என்பதும் இந்த கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
பிறப்புவீதம் குறைவடைந்தமை, ஆயுள்காலம் அதிகரித்தமை, இளைஞர்களின் புலம்பெயர்வு என்பனவே இலங்கையில் ுதியோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்று கருதப்படுகிறது.
Post a Comment