Header Ads



அல்லாஹ்வின் அருள் உங்கள் மீது பொழியட்டுமாக..! அப்சல் குரு எழுதிய கடிதம்


"தூக்கிலிட்டதால் எனக்கு கிடைத்த புகழை நினைத்துப் பெருமைப்படுங்கள்" என்று அப்சல் குரு, தனது குடும்பத்துக்கு இறுதியாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் டெல்லி திகார் சிறையில் அப்சல்குரு தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார். தூக்கிலிடப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அப்சல் குரு தன் குடும்பத்தினருக்கு இறுதி கடிதம் ஒன்றை எழுதினார். 

இந்தக் கடிதம் பிப்ரவர் 11-ஆம் திகதி டெல்லியிலிருந்து விரைவு தபால் மூலம் அப்சல் குரு மனைவிக்கு அனுப்பபட்டது. இக்கடிதத்தை 12-ஆம் திகதி அப்சல் குருவின் மனைவி தபஸம் பெற்றுக் கொண்டார். 

கடிதத்தில் அப்சல்குரு எழுதியிருப்பதாவது,, 

மதிப்புக்குரிய என் குடும்ப உறுப்பினர்களே மற்றும் அல்லாஹ்வின் விசுவாசிகளே! அல்லாஹ்வின் அருள் உங்கள் மீது பொழியட்டுமாக! இத்தகைய புகழை அடைய என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக அல்லாஹ்விற்கு நூறாயிரம் நன்றிகளை செலுத்துகிறேன். 

மேலும் நாம் அனைவரும் உண்மை மற்றும் நியாயத்தின் பக்கம் இருந்ததற்காக அல்லாஹ்வின் விசுவாசிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நாம் அனைவரும் இந்த தூய்மையான வழியில் நடந்து உண்மைக்காகவும், நியாயத்துக்காகவும் உயிர் துறப்போமாக! 

என் மரணத்தினால் ஏற்பட்ட இழப்பு மற்றும் வருத்தம் இவற்றைப்பற்றி எண்ணிக் கொண்டிராமல், தூக்கிலிடப்பட்டதால் எனக்கு கிடைத்த புகழை என் குடும்பத்தினர் அனைவரும் மதிக்க வேண்டும். 

இது என் குடும்ப உறுப்பினர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோளாகும். 

உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் ரட்சகனாகவும், பாதுகாப்பாளனாகவும் விளங்குவானாக! இவ்வாறு அப்சல் குரு அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார். 

1 comment:

Powered by Blogger.