அட்டாளைச்சேனைப் கோணாவத்தை ஆற்றினை பாதுகாக்க அமைச்சர் உதுமாலெப்பை உறுதி
(ரீ.கே. றஹ்மத்துல்லா)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இயற்கையாக அமையப்பெற்ற கோணாவத்தை ஆற்றின் பெருமையும், பெறுமதியும் விளங்காததன் காரணமாகவே மக்கள் அதனை மாசுபடுத்தியும், அழித்தும் வந்துள்ளனர். இன்று இதனை பாதுகாத்து சிறந்த சுகாதாரச் சூழலையும், வருமானத்தையும் பெறும் வகையில் தம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு இன்று மக்களின் பூரண ஆதரவுகிடைக்கப் பெற்றுவருவது மேலும் உச்சாகத்ததை வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
போணாவத்ததை ஆற்றினை அழகுபடுத்தி, சிறந்த சுகாதார சூழலையும், ஆற்றின் பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தும் வகையிலான இரண்டாம்கட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக அமைச்சர் தலைமையிலான நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம், விவசாய அமைப்புக்கள் ஆகியவற்றின் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் 25-02-2013 கோணாவத்தை ஆற்றைப் பார்வையிட்டதன் பின்னர் அல்முனீறா பெண்கள் உயர்பாடசாலையில் இது தொடர்பாக கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தற்போது பணியினை விரைவாக முன்னெடுப்பது தொடர்பிலான கருத்தப்பரிமாறல்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்காக துறைசார்ந்த அதிகாரிகள் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டன.
Post a Comment