Header Ads



முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுவது உண்மையில்லை


(Gtn) சிங்களவர்களை விட முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையுமில்லை என உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

1962, 1983, 1993, 2011 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம் மக்களின் சனத் தொகை வீதம் அதிகரித்துள்ளதாகவும் சிங்கள மக்களின் சனத் தொகை வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகதவும் கூறப்படுவதில்லை உண்மையில்லை. 

1956, 1967, 1983, 1994, 2011 ஆம் ஆண்டுகளில் கொழும்பு நகரில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். வர்த்தகத்திற்காக அரேபியாவில் இருந்து இந்தியா ஊடாக இலங்கை வந்த முஸ்லிம் ஆண்கள் இலங்கை பெண்களை மணந்து கொண்டனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற சுதந்திரத் தின வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.