முஸ்லிம் கைதிகளுக்கு சிறைச்சாலையில் பன்றிக்கறி - மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்
முஸ்லிம் கைதிகளுக்கு பிரிட்டன் சிறைச்சாலையில் பன்றிக்கறி உணவாக வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஸ்லீம்கள் பன்றிக்கறி சாப்பிடுவதை அவர்களின் மத பாவச் செயலாகக் கருதுகிறார்கள். ஆனால் பிரிட்டனில் முஸ்லீம் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பன்றி இறைச்சி கலந்திருந்தது என்று மரபணு சோதனை மூலமாக உறுதியாகியுள்ளது.
இதனால் சிறைச்சாலைக்கு உணவுப் பொருள் வழங்கி வந்த ஒப்பந்தகாரர்களின் ஒப்பந்தத்தை பிரிட்டன் சிறைத்துறை உடனடியாக ரத்துச் செய்ததுடன் நடந்த தவறுக்கும் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. மேலும் இதுகுறித்து பிரிட்டனின் அனைத்து சிறைச்சாலைகளும் FSA (Food standards agency) எனப்படும் உணவுத் தர வாரியத்துக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்த தவறு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப் படுகிறது.
இதனால் மனம் புண்பட்ட முஸ்லீம் கைதிகளிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக, சிறைச்சாலை சீர்திருத்த அறக்கட்டளையின் இயக்குநரான ஜீலியட் லியோன் தெரிவித்துள்ளார். inneram
Post a Comment