Header Ads



கல்முனை மாநகர சபைக்கு ஆசிய மன்றம் நிதியுதவி


(அகமட் எஸ் முகைடீன்)

கல்முனை மாநகர சபையின் வருமானப்பிரிவின் நடவடிக்கையினை மேம்படுத்துவதற்காக 450,000  ரூபாவினை ஆசிய மன்றம் வழங்கியது. 

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் இதற்கான காசோலையினை ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.வலீத் வழங்கிவைத்தார்.

கல்முனை மாநகர சபையின் முதல்வராக சிரஸ் மீராசாஹிப் பதவியேற்றது முதல் ஆசிய மன்றத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்திவரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் பெறுபேறுகளின் பிரதிபலனாக இக்காசோலை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேற்படி செயற்திட்டத்திற்கு ஆசிய மன்றம் கல்முனை மாநகர சபைக்கு இத்தோடு 25 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்போது மாநகர சபையின் பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.