ஜம்இய்யத்துல் உலமா சபை சுதந்திரதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவேண்டும்
இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தை பகிரங்கமாக கொண்டாடும் படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளமையை உலமா கட்சி வரவேற்பதோடு உலமா சபையும் சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக முஸ்லிம்களும் பாரிய விட்டுக்கொடுப்புக்களை வழங்கியதுடன் அதற்கான போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளனர். ஆனாலும் பின் நாட்களில் சுதந்திர தின விழா கொண்டாடுவது ஹறாம் என்பது போல் முஸ்லிம்கள் நடந்து கொண்டதை காண முடிந்தது.
இந்நிலையிலேயே முஸ்லிம் உலமா கட்சியினால் 2008ம் ஆண்டு கொழும்பில் தேசிய சுதந்திர தின வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை வரலாற்றில் உலமாக்கள் தலைமையிலான அமைப்பொன்றால் நடத்தப்பட்ட முதலாவது சுதந்திர தின விழா அதுவேயாகும். அவ்விழாவில் ஆளுனர் அலவி மௌலானா, அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், அமீரலி உட்பட எமது உலமாக்களும் கலந்து கொண்டனர்.
ஆனாலும் அதன் பின் பல உலமாக்களால் நாம் இதற்காக விமர்சனம் செய்யப்பட்டோம். ஜம்இய்யத்துல் உலமாவும் அரசாங்கமும் எம்மோடு ஒத்துழைத்திருந்தால் இதனை தொடராக நடாத்தி இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெரை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
எது எப்படி இருப்பினும் இப்போதாவது இது விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கறை பாராட்டப்படத்தக்கதாக இருக்கும் அதே வேளை வெறுமனே மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டிராமல் உலமா சபையும் முன்னின்று இத்தகைய சுதந்திர தின விழாவை நாடெங்கும் நடாத்த முன் வர வேண்டும் என உலமா கட்சி வேண்டிக்கொள்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
Post a Comment