அப்சல் குரு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொழுகை நடாத்த அனுமதி
அப்சல் குரு உடல் புதைக்கப்பட்ட இடத்தில், தொழுகை நடத்துவதற்கு, அவரின் குடும்பத்தினர், முறைப்படி கோரிக்கை விடுத்தால், உடனடியாக, அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்,'' என, மத்திய உள்துறை செயலர், ஆர்.கே.சிங்., கூறியுள்ளார்.
அப்சல் குருவுக்கு, கடந்த, 9ம் தேதி, டில்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த, அப்சல் குருவின் குடும்பத்தினர், "எங்களுக்கு முன் கூட்டியே, தகவல் தெரிவிக்காமல், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது' என, புகார் கூறியிருந்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே, ""அப்சல் குருவின் குடும்பத்தினர் விரும்பினால், அவரை புதைத்த இடத்தில், தொழுகை நடத்த, அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்'' என்றார்.
இதுகுறித்து, மத்திய உள்துறை செயலர், ஆர்.கே.சிங்., நேற்று கூறியதாவது,
அப்சல் குருவின் உடல், திகார் சிறை வளாகத்துக்குள், புதைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர், இங்கு வந்து, தொழுகை நடத்துவதற்கு, அனுமதி கோரினால், அவர்களுக்கு, உடனடியாக அனுமதி வழங்கப்படும். இதில், எந்த பிரச்னையும் இல்லை.சிறையிலிருக்கும்போது, அப்சல் குரு பயன்படுத்திய உடமைகள், அவர்களின் குடும்பத்தினரிடம், விரைவில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு, ஆர்.கே.சிங் கூறினார்.
உடல் வேண்டும்:
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள, அப்சல் குருவின் உறவினர், முகமது யாசின் கூறியதாவது:அப்சல் குருவின் உடலை, முறைப்படி புதைக்க விரும்புகிறோம். இதனால், அவர் உடலை, எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, திகார் சிறை அதிகாரிகளுக்கு, கடிதம் எழுதியுள்ளோம். திகார் சிறை அதிகாரிகளின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அப்சல் குருவுக்கு, தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து, முன் கூட்டியே, எங்களுக்கு தகவல் தெரிவித்ததாக அரசு தரப்பில் கூறியது, எங்களின் மனதை புண் படுத்தி விட்டது. இதுகுறித்த கடிதம், நேற்று முன்தினம் தான், எங்களுக்கு கிடைத்தது. இந்த விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகளால், எங்களுக்கு ஏற்பட்ட காயம், ஒருபோதும் ஆறாது.இவ்வாறு, முகமது யாசின் கூறினார்.
என்றும் என் மதிப்புக்குரிய ஜஃப்னா முஸ்லிம் இணய தளத்திற்கு!எமது சமூகம் பயன் படுத்தும் சில விஷேட சொற்கள் உள்ளன.அவைகளில் ஒன்றுதான்,மரணி.த்த ஒரு முஸ்லிமை ,புதைத்தல்,,,என்பதற்கு பதிலாக ,,அடக்கம்,, செய்தல் என்பது, எனது தாழமையான கருத்தாகும்.
ReplyDelete