அதிக நேரம் டி.வி. பார்ப்பது ஆண்மைக்கு பாதிப்பு
அதிக நேரம் டிவி பார்க்கும் ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை பாதி அளவு குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டிஷ் ஜெர்னல் ஆப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற பத்திரிகை பல ஆண்டுகளாக மருத்துவ ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இளம் வயதுடைய ஆண்கள் அதிக நேரம் டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் 18 வயது முதல் 22 வயதுடைய 189 ஆண்கள் உட்படுத்தப்பட்டனர். அதிக நேரம் டிவி பார்க்கும் ஆண்களிடம் ஏற்படும் விந்து அணு மற்றம் பற்றி கண்டறிவதுதான் இந்த ஆய்வின் நோக்கம். அதன் படி வாரத்திற்கு 20 மணி நேரம் அல்லது அதற்க்கு மேல் டிவி பார்க்கும் இளம் வயது ஆண்களிடம், அவ்வாறு டிவி பார்க்காத ஆண்களை விட சராசரியாக 44% விந்து அணுக்கள் குறைவாக உள்ளதை கண்டறிந்துள்ளனர். அதே போன்று வாரத்திற்கு 15 மணி நேரம் அல்லது அதற்கு மேல் உடற் பயிற்சி செய்யும் ஆண்களுக்கு , வாரத்திற்கு 5 மணி நேரம் உடற் பயிற்சி செய்யும் ஆண்களை விட விந்து அணுக்களின் எண்ணிக்கை 73% அதிகம் உள்ளதும் தெரியவந்துள்ளது.
இவைகள் மட்டும் இல்லாது அதிக மது அருந்துவது, புகைப்பது, நேரம் தவறி உண்பது , உறங்குவது என மனித வாழ்விற்கு பொருந்தாத வகையில் இன்றைய இளம் தலைமுறையினர் கடைபிடிக்கின்றனர். இதனால் குழந்தை பிறப்பு மட்டும் இன்றி பல வகை பாதிப்புகளுக்கு உள்ளாகி இளம் வயதில் தங்கள் வாழ்கையை முடித்துக்கொள்கின்றனர்.
Post a Comment