''மார்ச் மாதத்திற்குள் உனக்கு மரணம்'' - குருநாகல் முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை கடிதம்
(இ. அம்மார்)
குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல நகரில் அமைந்துள்ள முஸ்லிம் கடைகளுக்கு 'ஹலால் எனக் குறிப்பிட்டு சிங்கள மக்களின் செல்வங்களை சுவீகரிக்கும் பர தம்பியா 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் உனக்கு மரணம் 'என்று மிரட்டல் விடுத்து சிங்கள பௌத்த அமைப்பினால் நேற்று அனுப்பிய கடிதம் தொடர்பாக இன்று 12-02-2013 நாரம்மல பொலிஸார் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அவர் உரிய உயர் பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்புகளை நேற்று முறைப்பாடு தெரிவித்திருந்தார்.
இன்று நாரம்மல பொலிஸார் நாரம்மல சிங்கள வர்த்தக சங்கத்திருடன் முஸ்லிம் வர்த்தகர்களையும் அழைத்து இது தொடர்பாக விளக்கமளித்துள்ளதுடன் இந்த துண்டுப் பிரசுரத்தை அனுப்பிய கடிதம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தக் கடிதத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்த துண்டு பிரசுரம் குறித்து முஸ்லிம் வர்த்தகர்கள் எந்தக் கவலையும் கொள்ளவும் தேவையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
akkah kareem
ReplyDeleteகனடா நாட்டில் உல்ல அரசியல் அமைப்பில் உல்ல reec call இன்கு சட்டமாக்கினாதான் நம்ம அரசியல்வாதிகல் பொது மக்கலுக்கு பயப்படுவார்கல்.
ReplyDeleteஇன்றைய இந்நிலைக்கு நம்மில் உள்ளநம்மவர்களையே காட்டிக்கொடுக்கும் கயவர்களே காரனம் கடந்த ஓரிரு மாதங்களாக இஸ்லாமிய அமைப்புகளை பட்டியல்படுத்தி பௌத்த அமைப்புகளிடம் கொடுத்தவர்கள் யார்?????? முஸ்லிம் சமூகத்திலுள்ள பெரிய கூட்டம் முனாபிக்கள்
ReplyDelete