Header Ads



ஹலால் சான்றிதழ் பிரச்சனையை அரசு மிகவும் அவதானத்துடன் கையாள்கின்றது


(எம்.ஜே.எம். தாஜுதீன்)

ஹலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பில் நாட்டில் ஏற்பட்டு;ள்ள பிரச்சினை மிகவும் பாரதூரமானதாகும். இதனை அரசாங்கம் மிக அவதானத்துடன் கையாள்கின்றது என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு இன்று 07-02-2013 பிற்பகல் தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

இரு இனங்களுக்கு இடையில் பாரிய முரண்பாடுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தக்கூடிய அளவில் வளர்ந்துள்ள இந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் பிரச்சினையை அரசாங்கம் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கின்றது. இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இன முரண்பாடுகள் காரணமாக கடந்த காலங்களில் மிகவும் பாரதூரமான விளைவுகளைச் சந்தித்த அனுபவம்  இலங்கை மக்களுக்கு உண்டு.

இலங்கையில் சகல இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த உரிமை மீறப்பட்டுள்ளதா என்பது பற்றி ஆராயப்படவேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இது மத பேதங்களைத் தூண்ட வழி வகுத்துள்ளது. இன மோதல்கள் வெடிக்கக்கூடிய சூழலைத் தோற்றுவித்துள்ளது.

இது உடனடியாகப் பேசித்தீர்க்கக்கூடிய பிரச்சினையல்ல. இன்றைக்கோ அல்லது நாளைக்கோ அதற்கான முடிவை அறிவித்துவிட முடியாது. எனவே அரசாங்கம் மிகவும் பொறுப்படன் செயற்படுகின்றது.

சகல சமயங்களுக்கும் சம உரிமைகள் இருக்க வேண்டும். அதே நேரம்  இலங்கையில் சட்டங்களையும் அவர்கள் மதித்து நடந்துகொள்ள வேண்டும். இந்த ஹலால் சான்றிதழ் வழங்குவதில் ஒரு பிரச்சினை இருக்கின்றது என்பது எனது கருத்தாகும். இந்த பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவர இன மக்களும் ஒற்றுமையுடன் ஒன்றிணையவேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். 

1 comment:

  1. ஹலால் உணவை முஸ்லிம்கள் சாப்பிடுவது பிரச்சிணை அல்ல,ஆனால் அதற்காக கொடுக்கப் படும் விளம்பரம்,அதற்கான நிர்வாகக் கட்டமைப்பு போன்றன இலங்கை மக்கள் அனைவர் மீதும்,ஹலால் என்ற பெயரால் இஸ்லாம் ஆளுமை செலுத்த முற்படுகிறது என்பதுதான் பிரச்சிணை.இதுவொரு மனோவியல் ரீதியான பிரச்சிணை,முஸ்லிம் கலாச்சார அமைச்சின் கீழ் ஹலால் பிரிவு இயங்கினால் சிக்கல் இருக்க மாட்டாது என நம்பலாம்.

    ReplyDelete

Powered by Blogger.