மதத்தின் பெயரால் கபளீகரம் செய்யப்படும் முஸ்லிம் பிரதேசம் (படங்கள் இணைப்பு)
(எஸ்.எல். மன்சூர்)
பொத்துவில் நகரம் ஒரு உல்லாசபுரி. வெளிநாட்டவர்கள் அங்கு வந்து உல்லை எனப்படும் அறுகம்குடா கடற்கரையில் பொழுதைக் கழிப்பர். இயற்கையுடன்கூடிய அழகிய கடற்கரை அறுகம்குடா. இங்கு பல நூற்றுக்கணக்கான உல்லாச விடுதிகளும், தேநீர் கொட்டகைகளும் காணப்படுகின்றன. வெளிநாட்டவரும், உள்நாட்டவரும் இங்கே ஓட்டல்களை உருவாக்கி வியாபாரம் செய்துவருகின்றனர். இங்கு வருகை தருகின்ற உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கு இன்னுமொரு இடம் அழகுணர்ச்சியை ஏற்படுத்துவிடுகின்றது. அதுதான் மணல்மலை. அறுகம்குடாவை அண்டியதான ஒரு பெரும் மலை ஒன்று பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றது. அதுதான் மணல்மலை. பொத்துவில் வரும் எவரும் இந்த மணல்மலையை பார்த்து அதன்மேலேறி கடலுடன் இணைந்த இயற்கையையும் இரசித்துவிட்டுத்தான் செல்வர்.
இந்த மணல் எவ்வாறு உருவானது என்பதற்கு சரித்திரம் ஒன்று உள்ளது. ஒருகாலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் சுனாமி ஏற்பட்டு கடல் பெருக்கெடுத்து அறுகம்குடா கடலிருந்த மணல் முழுவதும் இடமாற்றப்பட்டு தற்போதைய மணல் இருக்கும் இடத்திற்கு வந்தாகவும், இங்கிருந்த சிற்றரசின் மடாலயம் ஒன்று மணில் புதையுண்டு போனதாகவும் கூறப்படும் கதையும் இப்பிரதேசத்தில் உள்ளது. அந்தவகையில் இப்பிரபிரதேசத்திற்குள் புதையுண்டுபோனதாகக் கூறப்படும் பழங்கால மடாலயமொன்று இருப்பதாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்ட புதை பொருள்கள் அனைத்தும் தொல்பொருள் திணைக்கள அனுமதியுடன் அங்கேயே பாதுகாத்து வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்த போதிலும் இப்பிரதேசம் கடற்கரையை அண்டிய பிரதேசமாக இருப்பதாலும், பொத்துவில் பிரதேசத்தில் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருவதாலும் இந்த பிரதேசத்தின் முக்கியத்துவம் கருதி காவு கொள்ளத் திட்டங்கள் திட்டப்பட்டு பௌத்த மதப் பெரியார்கள் இங்கு வருவதும், போவதும், தொடர்ச்சியாக வாழ்ந்து வருவதையும் அதனை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலைமையில்தான் தற்போது புதிய பாதையொன்றும் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பிராந்தியத்தை பார்வையிடுவதற்காக நாளாந்தம் வரும் பெரும்பாண்மையினரின் வருகையைத் தொடர்ந்து இவ்விடம் முக்கியத்துவமிக்கதாக மாற்றம் அடைந்து வருகின்றது. ஏழை முஸ்லீம்கள் தங்களது ஜீவனோபாயத்தை நிறைவு செய்வதற்காக வாழ்ந்துவரும் இப்பிரதேசம் முழுமையான கடற்கரையோரமாக காணப்படுவதால் அடிக்கடி பெரும்பான்மையினர் அதிகளவு வருவதனைத் தொடர்ந்து அங்கு நிரந்தரமாக வாழும் முஸ்லீம்கள் மத்தியில் பயஉணர்வு ஏற்படலாயின. அதற்குக் காரணமும் இல்லாமலுமில்லை. நடப்பட்டுள்ள எல்லைக் கட்டைகள் சிலவேளைகளில் நகர்ந்துவிடுவதுமுன்டு.
எனவேதான் இந்த இடத்தை இலகுவாக வந்தடைவதற்கான ஒரு பாதையை அமைக்கும் முயற்சியில் களமிறங்கிய பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த காவியுடை தரித்தவர்களுடன் இணைந்த பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் அரச ஆதரவுடன் பாதைக்கான வழியை தேடியபோது ஏற்பட்ட பிரச்சினைகள், இழுபறிகள் ஆகியவற்றுக்குப் பிறகு தீர்வொன்று எட்டப்பட்டது. அதாவது அங்குவாழ் மக்களுடன் இணைந்து வழமையான பாதைக்குப் புறம்பாக யாருக்கும் பாதகமில்லாது ஒரு புதிய மாற்றுப்பாதை தெரிவு செய்யப்பட்டு தற்போது புதிய பாதைக்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டு அது முடிவுறும் தறுவாயில் காணப்படுகின்றது.
இத்தனைக்கும் மேலாக இப்பிரதேசத்தில் வாழும் சின்னஞ்சிறு மாணவர்களின் அறிவுப் பசியைப்போக்க ஒரு பாடசாலை இல்லாமை பெரும் குறைபாடாக காணப்பட்டது. இதனை உணர்ந்த அப்பிரதேச முக்கியஸ்தர்கள் உடனடியாக அங்கிருந்து பழைய கட்டிடமொன்றை திருத்தி சுத்தம் செய்து அதில் தாறுல் பலாஹ் வித்தியாலயத்தின் ஒரு பிரிவாக கல்விநடவடிக்கையை ஆரம்பித்து, தரம் ஒன்று, இரண்டு மாணவர்களை இணைத்து கற்பிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொண்டுவருகின்றது. இதற்கு அருகாமையில் முன்பள்ளிப் பாடசாலை ஒன்றும் இயங்கி வருகின்றது. முழுக்க முழுக்க முஸ்லீம்கள் மட்டுமே வாழ்ந்துவரும் இப்பிரதேசத்தில் சிங்கள கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கத் தக்கவாறு கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடம் தொல்பொருளுக்காக பாதுகாக்கப்பட்டுவருகின்ற ஒருபிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு எல்லைகளுக்கு கற்களும் நடப்பட்டுள்ளன. இருந்தாலும் இப்பகுதியை அதிகளவு பெரும்பான்மையின மக்கள் பார்க்க வருவதன் காரணமாக முஸ்லீம்கள் வாழ்ந்து வரும் இந்த இடமும் இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சமும் அங்கு வாழ்கின்ற மக்களின் உள்ளத்தில் எழுகின்றன.
எதுஎப்படியோ மத்தின்பெயரால் பல்லின மக்கள் வாழும் உரிமைய அறுத்தெறிந்து வாழும் இடத்தின் உரிமையை பலாத்காரமாக பெற்றுக் கொள்ளும் மனிதாபிமானமற்ற ஒரு நடத்தைக் கோலம் எமது நாட்டில் அண்மைக் காலாமாக அறங்கேற்றப்பட்டுக் கொண்டு வருகின்ற ஒரு காலகட்டதில் இலங்கை வாழ் முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலமை மாற்றமடைதல் வேண்டும். இந்நாட்டில் ஜனநாயகப் பண்புகள் மேலோங்கி, மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு நிலைமையில் ஏற்கனவே பொத்துவில் பிரதேசத்தின் எல்லைப் புறங்கள் வௌ;வேறு பெயர்களால் பறிக்கப்பட்டு வந்துள்ளமை நினைவிற் கொள்ளதாகும். அந்நிலைமை இறுதியில் மதுரஞ்சேனை மக்கள் வாழுமிடத்தையும் பறித்துவிடும் நிலைமைக்குள் தள்ளப்படக்கூடாது என்பதற்காகவே இதற்கான முன்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உரிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் அடிப்படையான அம்சத்தை விளங்கிக் கொள்வதன் ஊடாக நாட்டில் சகல இனத்தவரும் ஒற்றுமையுடன் வாழத்தக்கதான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆதலினால் அரசுடன் ஒத்து ஊதுகின்ற அரசியல் வாதிகள் மற்றும் சமயவாதிகள் இதற்கான மாற்று நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி வாழ் மக்களும், புததிஜீவிகளும், வேண்டுகோள் விடுகின்றனர்.
Post a Comment