Header Ads



ஹலால் சான்றிதழைக் காரணம் காட்டி முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக காடைத்தனங்கள்


ஹலால் சான்றிதழைக் காரணம் காட்டி முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக காடைத்தனங்களை கட்டவிழ்த்து விடுவதிலேயே பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ள முஸ்லிம் தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவர் அசாத் சாலி,ஜெம்இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

முஸ்லிம் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அசாத் சாலி விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த  அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

பொதுபலசேனா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும் விஷமத்தனமான பிரசாரங்களும் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. மாறாக நாளுக்கு நாள் அவர்களின் அட்டகாசங்களும் அட்டூழியங்களும் சட்டவிரோத செயற்பாடுகளும் பிரகடனங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன. முஸ்லிம் சமூகம் இன்று தமக்காக குரல் கொடுக்க யாரும் இல்லாத நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மௌனித்துப்போய்  உள்ளனர். காவிஉடை தரித்தவர்களின் காடைத்தனம் கட்டுங்கடங்காமல் செல்கின்றது.

பொது பலசேனா அமைப்பினரை ஜனாதிபதி அண்மையில் சந்தித்து மிக நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் முழுமையான விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இன ஐக்கியத்தையும் சகல இனங்களுக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை உள்ளது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில்  ஜனாதிபதி வலியுறுத்தினார் என்றும் பொதுவான சில தகவல்கள் தான் வெளியாகின.

ஆனால், இந்தச் சந்திப்பில் பொதுபல சேனாவின் பல கோரிக்கைகளையும்  ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்ற ரீதியில் சில செய்திகள் வெளியாகியுள்ளன. அவை பற்றி எந்த விபரமும் இல்லை. ஆனால், இந்த சந்திப்பின் பின் பொதுபல சேனாவின்  செயற்பாடுகள் மேலும் மூர்க்கமடைந்துள்ளன. நாடு முழுவதும் முஸ்லிம் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவது இந்தச் சந்திப்பின் பின்னர் அதிகரித்துள்ளது. முஸ்லிம்கள் நாட்டின் பல பகுதிகளில் தமது பூர்வீக வாழ்விடங்களை காலி செய்ய வேண்டும் என்ற அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

2 comments:

  1. நீங்க முதலில் தெளிவடைங்க... ஒங்களுக்கு ஒரு நிலையான கொள்கை இல்லை. இங்க வந்து மீன் பிடிக்கத் தேவையில்லை.

    ReplyDelete
  2. My questions to Bodu Bala Sena?
    - All Buddhist monks eat home made food or non-veg food which is provided by the Buddhist community. How come it is an issue for you with Muslim's Halal food? You eat your community's food which is cooked and provided by your community not by Muslims.
    - As it is a common practice in Sri Lanka, most Sinhalese eat dry fish or haal messa curry or vegetables, so these foods are naturally halal for Muslims. So why do you think Muslim's halal food has anything to do with your food?

    -Some might say some Buddhist eat meat/ chicken which are cut according to Halal method. Ok - here we can arrange non-Muslims to slaughter animals for Buddhists or non-Muslims..

    Your agenda is not Halal for sure!!!!..

    ReplyDelete

Powered by Blogger.