Header Ads



பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் ஆடம்பரம்



பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பஞ்சாப் மாகாணம் லாகூர் அருகேயுள்ள பக்ரியா நகரில் சுமார் 25 ஏக்கரில் ஆடம்பர அரண்மனை கட்டியுள்ளார். இது துப்பாக்கி குண்டுகள் துளைக்காத வகையில் புல்லட் புரூப் தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் தங்க முடியும். படுக்கை அறைகள், மாநாட்டு ஹால்கள், அலுவலகங்கள் அனைத்தும் இந்த மாளிகைக்குள் உள்ளன.

ஆடம்பர அரண்மனைக்குள் தனியார் ஜெட் விமானங்கள் இறங்க ஓடுதளமும், ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் தளமும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு பிலாவல் ஹவுஸ் என சர்தாரி பெயரிட்டுள்ளார். தனது ஒரே மகன் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு இதை பரிசாக வழங்குகிறார். இதன் கட்டுமான பணி முடிவடைந்துவிட்டது.

எனவே, இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற இருப்பதையொட்டி, அதை பார்வையிட அதிபர் சர்தாரி வருகிற ஞாயிற்றுக்கிழமை (10-ந்தேதி) இங்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த ஆடம்பர அரண்மனை தொழில் அதிபர் மாலிக் ரியாஷ் உசேன் என்பவரால் சர்தாரிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதை சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த மாளிகை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மாளிகையில் இருந்து 1.5 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இவரது மாளிகைக்குள் மினி மிருக காட்சி சாலையும், விவசாய நிலங்களும் உள்ளன. 

No comments

Powered by Blogger.