Header Ads



முஸ்லிம்களின் சதவிகிதம் பெருமளவு அதிகரித்துவிட்டது - பொது பலசேனா


சர்ச்சைக்குரிய சிங்கள பௌத்த அமைப்பான பொது பல சேனாவின் தலைவரான கிராம விமலஜோதி தேரர், ’சிலோன் ருடேக்கு’ வழங்கிய நேர்காணல் ஒன்றில், அந்த அமைப்பின் நோக்கங்கள் பற்றியும் மற்றும் அந்த அமைப்பு ஏன் ஸ்ரீலங்காவில் பல்லின கலாச்சார மற்றும் பல மத கலவைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது போன்ற சில ஏற்புடைய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

கேள்வி: பொது பல சேனா என்றால் என்ன?

பதில்: எங்கள் நாட்டை ஒழுங்கமைப்பதற்காக நாங்கள் பொது பல சேனாவை அமைத்துள்ளோம், அதாவது இந்த சிங்கள பௌத்த நாட்டைச் சூழந்துள்ள தற்போதைய குழப்பங்களிலிருந்து பௌத்த சாசனத்தை காப்பாற்றுவதற்காக. பௌத்த மத விவகாரங்களைப் பொறுத்தவரையில் இந்த நாட்டில் அதற்கான தலைமைத்துவமோ, வழி காட்டலோ அல்லது தெளிவான அதிகாரம் உள்ள வளங்களோ இல்லை. இதன் விளைவாக பௌத்தம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பொய்யர்கள் பௌத்த சாசனத்தை ஆக்கிரமித்து மகிழ்ச்சியற்றிருக்கும் எளிய மனிதர்களை மோசம் செய்கிறார்கள். 

போலியான புத்தர்கள் உருவாகத் தொடங்கியுள்ளதுடன் மற்றும் மக்கள் அவர்களை பின்பற்றவும் ஆரம்பித்துள்ளார்கள். சிலர் மார்க்க உபதேசங்களை வழங்கும் அதேவேளை மற்றும் சிலர் பௌத்தத்தை திரிவு படுத்த ஆரம்பித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 400 கிறீஸ்தவ தீவிர அமைப்புகள் பௌத்த குடும்பங்களை கிறீஸ்தவ மதத்துக்கு மதமாற்றம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். எனவே பௌத்த மத குருக்களான நாங்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து பௌத்த சாசனத்தை காப்பாற்ற முன்வந்துள்ளோம். நாங்கள் என்ன செய்தோமென்றால் ஆரம்பத்திலேயே அந்தப் போலிப் புத்தர்களை கைப்பற்றி அவர்கள் சமயச் சான்றாக அணியும் ஆடையை அகற்றி அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம். அவர்களில் சிலர் மனநோயாளிகள் அவர்கள் காவி உடைக்குள் தங்களை மறைத்துக் கொண்டுள்ளார்கள். அப்படியான ஒருவர் புத்தபிரான் ஸ்ரீலங்காவில் பிறந்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

பின்னர் நாங்கள் கொழும்பில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போலிப் பிக்குகளை வேட்டையாடத் தொடங்கினோம். அப்படியான 30 பிக்குமாரை நாங்கள் பிடித்துள்ளோம்.

மதமாற்றம் பற்றி கிராமத்திலுள்ள பிக்குகளை நாங்கள் எச்சரிக்கைப் படுத்தினோம். ஒவ்வொரு நாளும் 30 - 40 சிங்கள பௌத்த தாய்மார்கள் நோர்வே மற்றும் இங்கிலாந்தின் நிதியுதவியின் கீழ் செயற்படும் ஒரு தொண்டு நிறுவனத்தால் கருத்தடை செய்யப்பட்டு வருவதை நாங்கள் மேலும் கண்டறிந்தோம். இந்த கருத்தடை நடவடிக்கைகள் யாவும் அரசாங்க மருத்துவ மனைகளிலேயே செய்யப்பட்டுள்ளன. நாங்கள் பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கி அந்த நடவடிக்கையை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தோம். பின்னர் நாங்கள் இந்த ஹலால் விடயத்தில் தலையிட்டோம். இந்த ஹலால் சான்றிதழ்  ஜமாயத்துல் உலாமா எனும் நிறுவனத்தாலேயே வழஙகப்படுகிறது. அவர்கள் எங்கள் வியாபாரிகளிடமிருந்து சகல உணவு தயாரிப்புச் செய்முறைகளையும் இரகசியமாக எடுத்துக் கொள்வதுடன் அந்த சான்றிதழ் வழங்குவதற்காக பணமும் அறவிடுகிறார்கள். வெகு ஆரம்பத்திலேயே பாரம்பரிய கிறீஸ்தவர்களான ரோமன் கத்தோலிக்கர்கள், புரட்டஸ்ரான்ஸ் அல்லது ஆங்கலிக்கன்கள் ஆகியோருடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை, அவர்கள் பல நூற்றாண்டுகளாக எங்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள். பிரச்சினையை உருவாக்குபவர்கள், அந்த பாரம்பரிய கிறீஸ்தவ தேவாலயங்களில் இருந்து பிரிந்து வந்துள்ள சிறுபான்மை தீவிரவாத குழுக்களைச் சேர்ந்வர்களே. அவர்கள் இப்போது அடிப்படைவாதத்தின் ஒரு புதிய அடையாளத்தை ஊக்குவித்து வருகிறார்கள். மேலும் எங்களோடு நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வரும் பாரம்பரிய முஸ்லிம்களோடும் எங்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்பதையும் நாங்கள் உணர்ந்திருந்தோம். திரும்பவும் இங்கு பிரச்சினையை கிளப்புபவர்கள், புதிய அடையாளமான தீவிர இஸ்லாத்தை பின்பற்றும் ஒரு சிறுபான்மைக் குழுவினர்களாவர். அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள்தான் பெண்கள் தங்கள் முகங்களை மூடவேண்டும் என்று விரும்புபவர்கள்.

போர் முடிவடைந்த உடனேயே அவர்கள் தென்பகுதியில் சொத்துக்களையும் வியாபாரங்களையும் பெருந்தொகையான பணத்தை கொடுத்து கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ளார்கள். இப்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துவது, சிங்களவர்களின் சதவிகிதம் மிகக் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள அதேவேளை முஸ்லிம்களின் சதவிகிதம் பெருமளவு அதிகரித்துள்ளது.

கேள்வி: ஆனால் பொது பல சேனா ஒரு பாரிய மதக்கலவரத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்கிறது என்று ஒரு தீவிர கவலைகள் நிலவுகின்றன. ஏற்கனவே நீங்கள் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளீர்கள்………

பதில்: இல்லை, நிச்சயமாக இல்லை. நாங்கள் 30 வருடங்களுக்கு மேலாக ஒரு போர் காரணமாக மிகவும் துன்பப் பட்டுள்ளோம், நாங்கள் மற்றொரு போரை ஆரம்பிக்க விரும்பவில்லை. நாங்கள் ஒரு புதிய போரை ஆரம்பிக்கவேண்டும் என்று விரும்பினால் நிச்சயம் நாங்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும். அப்படியான குற்றச்சாட்டுகளை ஒரு சிறுபான்மையானவர்களே மேற்கொண்டு வருகிறார்கள். நாங்கள் சிங்களவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறோம், மற்றும் நாங்கள் சிங்கள பௌத்தர்களுக்காக மட்டுமே குரல் கொடுத்து வருகிறோம். மக்களுக்கான தலைமையை வழங்குவதில் பிக்குகளுக்கு வரலாற்று ரீதியான ஒரு பங்கு உள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து என்ன நடந்து வருகிறது என்றால் எளியோர்களுக்காக தலைமையேற்று வரும் பௌத்த பிக்குகள் பதவி நீக்கம் செய்யப்பட்டு வந்துள்ளார்கள். துறவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வியின் தன்மையினால் அவர்கள் தங்கள் குணாதிசயங்களையும் மற்றும் ஒருமைப்பாட்டையும் இழந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள் வித்தியோதயா மற்றும் வித்தியலங்கார பிரிவினைகளை பல்கலைக்கழகங்களாக மாற்றியமைத்ததில் இருந்து இந்தப் போக்கு ஆரம்பமானது. புத்தரோ அல்லது அரகாத் மகிந்தவோ சீரேட்ட பாடசாலை சான்றிதழ்(எஸ்.எஸ்.சி) பரீட்சை கூட சித்தியடைந்தவர்கள் அல்ல. பிக்குகளுக்கு ஏன் பட்டப்படிப்பு தேவை? பிக்குகள் வேலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே பல்கலைக்கழக பட்டங்களைப் பெறத் தொடங்கினார்கள். அதுமுதல் என்ன நடந்து வருகிறது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். கிட்டத்தட்ட அவர்களில் 90 விகிதமானவர்கள் பட்டம் பெற்றதின் பின்னர் சங்க சாசனத்திலிருந்து விலகிவிட்டார்கள். அப்படிச் செய்ததினால் உண்மையான அர்ப்பணிப்புள்ள பௌத்த பொதுமக்களின் இதயங்களிலும் மனங்களிலும் பாரிய ஏமாற்றம் ஏற்படுவதற்கு அவர்கள் ஒரு பெரும் காரண கர்த்தாக்களாக இருந்துள்ளார்கள். இதனால் பௌத்த பிக்குகளின் கல்வியில் மொத்த சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. இந்தக் கேள்விகளைத்தான் நாங்கள் எழுப்பியிருந்தோம். இது ஒரு சிங்கள பௌத்த நாடு.

கேள்வி: ஏன் நீங்கள் ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு எதிராக உள்ளீர்கள்? அந்த சான்றிதழ் ஒரு வியாபார நடைமுறையாக முஸ்லிம் அல்லாத ஏனைய பல நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறதே?

பதில்: நாங்கள் ஏன் ஹலாலை உண்ண வேண்டும்? அதை அவர்கள் உண்ண வேண்டுமாயின் அதை பல்பொருள் அங்காடிகளில் ஒரு விசேட பகுதியில் வைத்து விற்பனை செய்யுங்கள். நாங்கள் அதை உண்ண விரும்பவில்லை. இந்தப் போக்கு தொடருமானால், ஒரு நல்ல நாளில் ஒருவர் சொல்லக்கூடும் குரான் விக்கிரக வழிபாட்டை தடை செய்கிறது, அதனால் நாங்கள் அவற்றை கைவிட வேண்டும் என்று. 

எங்கள் தத்துவத்தில் எந்த தீவிரவாதமும் கிடையாது, நாங்கள் முஸ்லிம் மக்களைப்பற்றி பேசவில்லை. நாங்கள் அவர்களிடம் சொல்வதெல்லாம உங்கள் எண்ணங்களை எங்கள்மீது திணிக்க வேண்டாம் என்று மட்டுமே. எங்களுக்கு அவைகள் தேவையில்லை.

கேள்வி: நீங்கள் இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்று சொன்னாலும்கூட, குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர்கள் ஆகியோர்கள் எங்கள் சனத்தொகை இடையே கலந்துள்ளார்கள் இல்லையா? நாங்கள் பல மத,பல இன,மற்றும் பல்லினக் கலாச்சாரமுள்ள நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லையா?

பதில்: இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நீங்கள் இங்கிலாந்துக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ போய் அவை பல மத நாடுகள் என்று சொல்ல முடியுமா. உண்மையில் ஏனைய சமூகங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றன, ஆனால் அவை கிறீஸ்தவ நாடுகள். நீங்கள் ஒரு தென்னை பயிர் செய்யப்பட்டுள்ள இடத்தை தென்னந்தோப்பு என்றுதான் அழைப்பீர்கள். அங்கு வளரும் ஏனைய சிறு பயிர்களை நாங்கள் அடையாளம் காண்பதில்லை.

கேள்வி: எனவே, இந்த நாட்டிலுள்ள பல மத, பல் கலாச்சாரத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை?

பதில்: இல்லை இது ஒரு சிங்கள பௌத்த நாடு. இந்த சிங்கள பௌத்த நாட்டில் ஏனைய சமூகங்கள் வாழ முடியும். அதில் எங்களுக்கு ஆட்சேபணைகள் கிடையாது. நாடு முழுவதையும் சுற்றிப் பாருங்கள். இங்கு சிங்கள பௌத்த  புராதனச் சின்னங்களைத்தான் உங்களால் காணமுடியும். இந்த நாட்டில் எந்த ஒரு கிறீஸ்தவ அல்லது முஸ்லிம் புராதன சின்னங்களை உங்களால் காண முடியுமா? சில இந்து சமய புராதன சின்னங்கள் உள்ளன. மற்றவர்கள் இங்கு வாழ முடியும். சிங்களவர்களைக் காட்டிலும் சகிப்புத் தன்மையுள்ள வேறொரு சமூகம் கிடையாது. எனவே இங்கு வாழ்வதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.

கேள்வி: ஏனைய மதங்களின் தீவிரவாதம் பற்றி நீங்கள் பேசினீhகள். ஆனால் உங்களுடையதைப் போன்ற நிறுவனங்கள் அதாவது பொது பல சேனா சிங்கள பௌத்த தீவிரவாதத்துக்கு எழுச்சி வழங்குகிறதே……

பதில்: இதில் எந்த தீவிரவாதமும் கிடையாது. நாங்கள் தீவிரவாதிகள் அல்ல. போதிசத்துவாக்களைப் போல பொய் தோற்றம் கொண்ட பொய்யர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவது தீவிரவாதமா? அது தீவிரவாதமல்ல. இஸ்லாம், கிறீஸ்தவம் அல்லது இந்து சமயத்துக்கு எதிராக நாங்கள் பேசவில்லை. நாங்கள் அவர்களுக்கு சொல்வதெல்லாம், எங்கள் பௌத்தர்களை ஏமாற்றவோ அல்லது உங்கள் விசுவாசங்களையும் மற்றும் நடைமுறைகளையும் அவர்கள்மீது திணிக்க வேண்டாம் என்றுதான். மக்களை விசுவாசமில்லாமல் வேறு மதங்களுக்கு மாற்றுவதைப் பற்றி   எங்களுக்கு அக்கறையில்லை, ஆனால் 18 வயதை அவர்கள் அடைந்து பெரியவர்கள் ஆனதும் அதை செய்ய வேண்டும்.

கேள்வி: நீங்கள் ஸ்ரீலங்காவில் பௌத்த மதத்துக்கு தலைவர்கள் இல்லை என்று சொன்னீர்கள். ஆனால் மகாநாயக்க தேரர்கள் உள்ளனர் மற்றும் புத்த சாசனத்துக்கு என்று ஒரு அமைச்சும் உள்ளதே. பௌத்த மதத்துக்கு மிகவும் முன்னணியான இடம் வழங்கப்பட்டுள்ளது…..

பதில்: கிட்டத்தட்ட 30 மகாநாயக்க தேரர்கள் உள்ளார்கள். வருடத்துக்கு ஒரு முறை என்றாலும் அவர்கள் தங்களுக்குள் சந்தித்துக் கொள்கிறார்களா? பிக்குணிகளின் கவலைகளைப்பற்றி யாருமே கண்டு கொள்வதில்லை. கிராமப்புற பௌத்த கோவில்களில் உள்ள பிக்குகளின் குறைகளை யார் கவனிக்கிறார்கள்? அவர்களது தானமாவது அவர்களுக்கு ஒழுங்காகக் கிடைக்கிறதா என்று குறைந்தது யாராவது அவர்களிடம் கேட்டதுண்டா? ஆனால் இப்போது அந்த விடயத்தில் ஒரு எழுச்சி எற்பட்டுள்ளது. மகாநாயக்க தேரர்கள் விழித்துக் கொண்டுள்ளார்கள். கூட்டங்கள் நடைபெறுவதாக நான் கேள்விப்படுகிறேன். அதுதான் நடந்திருக்க வேண்டியது. மற்றும் ஊடகங்களுக்கான நெறிமுறைகளைப்பற்றி ஒரு விதிகளும் கிடையாது. இந்த சிங்கள பௌத்த நாட்டில் ஊடகங்கள் தங்களை எப்படி நடத்திக் கொள்ளவேண்டும், இதற்கு ஒரு மறு சிந்தனை தேவை.

கேள்வி: அரசாங்கத்திடமிருந்து நீங்கள் ஏதாவது உதவிகளைப் பெற்றுள்ளீர்களா?

பதில்: சிங்கள பௌத்தம் நீடித்திருப்பதற்கு வேண்டிய முக்கிய விடயங்களைப் பற்றி நாங்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடினோம். ஜனாதிபதி எங்களுடன் பேசினார். மற்றும் அதேபோல பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரும் எங்களுடன் பேசினார்கள். நாங்கள் என்ன செய்கிறோம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் எங்களிடம்; கேட்டார்கள். நான் அவர்களிடம் சொன்னேன், நாங்கள் தீவிரவாத குழுவினர் அல்ல, மற்றும் நாங்கள் காண்பது என்னவென்றால் நாங்கள் இந்த வழியில் போய்க் கொண்டிருந்தால் சிங்கள பௌத்தர்களுக்கு எதிர்காலம் இருக்கப் போவதில்லை என்று. நாங்கள் கிராமங்களுக்குச் சென்று சிறிய குடும்பம் பொன் போன்றது என்கிற சுலோகத்தை கண்டு ஏமாற வேண்டாம் என அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். அது தீவிரவாதமா?

கேள்வி: ஆனால் அதனால் சிக்கல்கள் ஏற்படும், நீங்கள் அதிக குழந்தைகளை பெறும்படி உபதேசிக்கும்போது பெற்றோர்களால் அவர்களுக்கு உணவளிக்க முடியாது கல்வி வழங்க முடியாது.

பதில்: அந்த பிரச்சினைகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும். மற்றவாகள் நான்கு பெண்களை திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுத் தள்ளும்போது, எங்களை ஒரு பிள்ளையை மட்டும் வைத்துக்கொண்டு சும்மா இருக்கும்படியா நீங்கள் சொல்கிறீர்கள்? அது சிங்கள பௌத்தர்களின் எதிர்காலத்தை பாழாக்கிவிடும்.

கேள்வி: பழைய கேள்விக்கே திரும்பவும் வருவோம். உங்கள் இயக்கத்தின் பின்னால் அரசாங்கம் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனவே?
பதில்: அரசாங்கத்திடமிருந்து எந்த வழியிலும் எந்த உதவியையுமே நாங்கள் பெற்றுக் கொண்டதில்லை. சில காலத்துக்கு முன்னால் நாங்கள் ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பின்போது ஜனாதிபதி மாளிகைக்கு எங்களை அழைத்துச் செல்ல அவர் ஒரு வாகனத்தைக் கூட அனுப்பவில்லை.

கேள்வி: கோட்டபாய ராஜபக்ஸவிடமிருந்து கூடவா? அவர் ஒரு தீவிர சிங்கள பௌத்தர் அல்லவா.

பதில்: இல்லை. நாங்கள் யாரிடமிருந்தும் எந்த உதவியையும் பெறவில்லை என்று நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து நாங்கள் எந்த உதவியையும் பெறவில்லை. அவர் எங்களிடம் சொன்னது என்னவென்றால் “ பிக்குமார்களே தயவு செய்து குழப்பத்தை உருவாக்காதீர்கள்” என்று. அதற்கு நான் அவரிடம் சொன்னேன், நாங்கள் குழப்பத்தை உருவாக்கப் போவதில்லை, மற்றும் அவரோ அல்லது அரசாங்கத்திலுள்ள வேறு யாரோ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று.

கேள்வி: நீங்கள் நோர்வேயிடமிருந்து நிதியினைப் பெற்றுக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனவே……

பதில்: பாதுகாப்புச் செயலாளர் எங்களுக்கு பணம் தருவதாக சிலர் சொல்லுகிறார்;கள். மற்றும் சிலர் நாங்கள் நோர்வேயிடமிருந்து பணம் பெறுவதாகச் சொல்கிறார்கள். நாங்கள் யாரிடமிருந்தும் ஒரு சல்லிக்காசு கூடப் பெற்றுக் கொள்ளவில்லை என்று புத்த பெருமானின் சிலைக்கு முன்னால்கூட சத்தியம் செய்து என்னால் கூற முடியும். நாங்கள் பொய் சொல்வதாக யாராவது நிரூபித்தால் மறுநாளே நாங்கள் எங்கள் இயக்கத்தை மூடி விடுகிறோம். சம்புத்த ஜயந்தி நிலையத்தை திருத்தியமைப்பதற்காக நான் வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்ற ரூபா 240 மில்லியனை நான் திருப்பிச் செலுத்தவேண்டியுள்ளது. அதுதான் நாங்கள் எங்களது வேலைகளுக்காகப் பயன்படுத்தும் எனது பௌத்த கலாச்சார நிலையத்துக்கான வாகனங்கள். நான் பௌத்த கொடையாளிகளின் உதவியுடன் தம்ம புத்தகங்களை எழுதி அச்சிட்டு வருகிறேன்.

கேள்வி: நீங்கள் எதுவிதமான நிதியுதவியையும் பெறவில்லை என்பது உங்களுக்கு நிச்சயமா?

பதில்: ஆம். நாங்கள் அரசாங்கத்திடமோ அல்லது எந்த நாட்டிடமோ அல்லது எந்த தொண்டு நிறுவனத்திடமிருந்தோ ஒரு சல்லிக்காசுகூட பெற்றது கிடையாது. நாங்கள் ஒரு அங்கத்தவர் இயக்கத்தை ஆரம்பித்து அதன்மூலம் அங்கத்துவ கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த வருட முடிவுக்குள் எளியவர்கள் மற்றும் மத குருமார் ஆகிய இரு பகுதியினரையும் இணைத்து 100,000 பேர்களை சேர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி: நெருக்கடியான தேசிய பிரச்சினைகளில் பிக்குகள் தலைமை ஏற்றுள்ளதாக நீங்கள் சொன்னீர்கள். சமீபத்தைய கடந்த காலங்களில் அப்படியான ஒரு தலைமையை நாங்கள் காணவில்லையே. உதாரணத்துக்கு நாட்டின் பிரதம நீதியரசர் தனது பதவியிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக நீக்கப்பட்டபோது பிக்குகள் மௌனமாக இருந்தார்களே.
பதில்: எல்லா விடயத்திலும் எங்களால் தலையிட முடியாது. நாங்கள் செய்ய வந்திருப்பதெல்லம் பௌத்த சாசனத்தை சுத்திகரிப்பதற்கே. நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம்.

கேள்வி: அதிகாரங்களை பகிர்வது பற்றிய விடயத்தில் உங்கள் நிலை என்ன?

பதில்: அதிகாரப் பகிர்வு பற்றி எங்களிடம் ஒரு நிலைப்பாடு இன்னும் ஏற்படவில்லை. அதைப்பற்றி நாங்கள் கலந்துரையாடவில்லை. அதிகார பகிர்வு சரியான ஒரு தீர்வு என நான் நினைக்கவில்லை. மாறாக அது இன்னமும் சிக்கலையே ஏற்படுத்தும். மத அடிப்படையில் பாடசாலைகளை பிரித்ததினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை நீங்கள் பார்த்தீர்களா? இப்போது சிங்கள மாணவர்களுக்கு முஸ்லிம் மாணவர்களை தெரியாது. அவர்கள்; ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய கலாச்சாரத்துக்கோ அல்லது மதத்துக்கோ மதிப்புக் கொடுப்பதில்லை.

(நன்றி: சிலோன் ரூடே)
தேனீ மொழிபெயர்ப்பு:; எஸ்.குமார்

6 comments:

  1. Why monks not marry?Then all population problem will quiekly solve............

    ReplyDelete
  2. முஸ்லிம் சகோதரர்களே! இவர்களை கண்டு கொள்ளாதிருப்பதுடன், எங்களை திடப்படுத்திக்கொள்வதும் இப்போதைய எங்களின் கடமையாகும்.

    ReplyDelete
  3. சகோதர்களே அவர்களுக்கு மட்டும் தானா 5 பிள்ளை பெக்க அனுமதி உண்டு போல {தேரர்} கூறுகிறார் இது என்னவோ அவரு போய் கொடுக்கூராப் போல சொல்றாரு.....எது எப்படியோ நிச்சயம் அவர்கள் பயப்பட்டாபோல நடக்கும்...இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  4. பயப்பட வேண்டாம் சகோதரர்களே. எந்நேரமும் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். அதுவே பாதுக்காப்பான ஆயுதமாகும்.

    ReplyDelete
  5. வரலாறு திரிவு படுத்தப்பட்டு இவரால் பேசப்படுகிறது.. இலங்கை என்றைக்குமே பௌத்த நாடாக இருந்ததில்லை.. இது ஒரு சைவ (இன்று இது இந்து என்று பேசப்படுகிறது) நாடு என்று யாவரும் அறிந்த விடயம். இதற்கான ஆதாரங்கள் இருந்த யாழ் நூலகத்தை திட்டமிட்டு தீ வைத்து அழித்தார்கள்.. குமரிக்கண்டம் என்பது பண்டைய சைவ தமிழ் வாழ்ந்த பிரதேசம் இது யாவரும் அறிந்த விடயம். விஜயன் வருகையோடு இலங்கை வந்தார்கள் பௌத்தர்கள்.. அவர்களும்.. சைவ மதத்தில் இருந்து பௌத்தமதத்தை தழுவியவர்கள்..பாண்டியர்கள்.. விஜயன் இலங்கை வந்தவுடன் குவேனி என்ற இயக்கர் குலப்பெண்ணை மணந்தான்.. இயக்கர்-நாகர் என்பது சிவனையும் - சூரியனையும் முழுமுதல் கடவுளாக வழிபடும் இனம்.. இலங்கை வேந்தன் இராவணன் ஒரு இயக்கர் குலத்தை சேந்தவர் என்பது புராதன நூல்களின் கூறப்பட்டுள்ளது.. இவ்வாறு வந்தவர்கள்.. பல குற்றங்கள் செய்து நாடு கடத்தப்பட்டவர்கள்.. இவ்வாறு வந்து இங்கிருந்தவர்களை அடித்து அவர்களின் பண்ணைகளை கைப்பற்றினார்கள்.. இவர்களுக்கு பயந்து பல தமிழர்கள் தெற்கு, மேற்கு பிரதேசங்களை வீட்டு வெளியேறினார்கள்.. அவற்றைக்கைப்பற்றி மெல்ல மெல்ல பெருகிய இனம் தான் சிங்கள - பௌத்த இனம்.. சிங்களவன் பேசும் அம்மா என்ற வார்த்தையே தமிழர்களிடமிருந்து இரவல் வாங்கியது.. இது இப்படி இருக்க இதை சிங்கள - பௌத்த நாடு என்று சொல்பவனும் கேட்பவனும் ..?.. சொல்லவேணும்

    ReplyDelete
  6. Allah will help us. lets ask him

    ReplyDelete

Powered by Blogger.