Header Ads



வானத்திலிருந்து எரிகல் விழுந்தமைக்கு அமெரிக்காதான் காரணம் - ரஷ்யர்கள் நம்பிக்கை


ரஷ்யாவில் எரிகல் விழுந்து 1500 பேர் படுகாயம் அடைந்தது குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 'அமெரிக்காதான் ஆயுத சோதனை நடத்தியிருக்கும்' என்று பலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கி.மீ. கிழக்கில் உள்ள யூரல் மலைப் பகுதியில் விண்ணில் இருந்து சக்திவாய்ந்த எரிகல் விழுந்து சிதறியது. இதில் வீடு, கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் 1200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். விண்ணில் இருந்து ரஷ்யா மீது சிதறியது உண்மையில் எது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மாஸ்கோவில் இருந்து வெளிவரும் 'நோவியி இஸ்வெஸ்ஷியா' என்ற நாளிதழ் தனது வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. இதில் வாசகர்கள் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.

ரஷ்யா மீது பறந்த வேற்று கிரக பறக்கும் தட்டு வெடித்து சிதறியிருக்கலாம். அது மனிதர்களுக்கு அனுப்பப்பட்ட கடவுளின் எச்சரிக்கையாக இருக்கலாம் என்று பலர் கூறியுள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட வாசகர்கள், ''ரஷ்ய மீது வெடித்து சிதறியது, அமெரிக்கா ரகசியமாக நடத்திய ஆயுத சோதனையாக இருக்கலாம்' என்று கூறியுள்ளனர். ஆனால், 25 சதவீதம் பேர் பறக்கும் தட்டுதான் வெடித்திருக்கும் என்று நம்புகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலானோர் அது எரிகல்தான் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். 'ரஷ்யாவே ஏவுகணை சோதனையை ரகசியமாக நடத்தியிருக்கும். அது வெடித்து சிதறி சோதனை தோல்வி அடைந்திருக்கும்' என்றும் ரஷ்யர்கள் பலர் கூறியுள்ளனர்.

1 comment:

Powered by Blogger.