கல்முனை மாநகர சபை உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு (படங்கள்)
(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவுகளை
கிழக்கு கழிவிற்கு சக்தி (ஈஸ்டெர்ன் வேஸ்ட் டு இனர்ஜி பிரைவெட் லிமிடட்)
நிறுவனத்தினருக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று
(06.02.2013) புதன்கிழமை மாநகர
முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது முதல்வர் கலாநிதி சிராஸ்
மீராசாஹிப், மேற்படி நிறுவனத் தலைவர் பிராங் ஓங்க் ஆகியோர் உடன்படிக்கை
பத்திரத்தில் ஒப்பமிட்டு கைமாற்றிக் கொண்டனர்.
திண்மக் கழிவிலிருந்து மின் சக்தியினை
உருவாக்குவதற்கான திட்டத்தினை மேற்படி நிறுவனம் செயற்படுத்தவுள்ளது. இத்திட்டமானது
2013 ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக கல்முனை மாநகர சபையினால்
சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை குறித்த நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முயற்சியினை
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மேற்கொண்டதன் விளைவாய் மேற்படி
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
முதல் மூன்று வருடங்களிற்கு இலவசமாகவும்
அதனைத் தொடர்ந்து பணம் செலுத்தியும் கழிவுகளை பெற்றுக் கொள்வதற்கு குறித்த நிறுவனம்
இணக்கம் தெரிவித்துள்ளது. கல்முனை மாநகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை
இடுவதற்காக காரைதீவு, அட்டாளைச்சேனை பிரதேச சபைகளுக்கு மாநகர சபையானது வருடந்தோறும்
செலுத்திவரும் மூன்று கோடி ரூபா இதன் மூலம் மீதமாவதுடன் மேலதிக வருமானத்தினையும்
ஈட்டக்கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஆணையாளர் ஜே.லியாகத்அலி,
மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் மற்றும் கணக்காளர்
எல்.ரீ.சாலிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment