ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து தோல்வியுடன் வெளியேறதொடங்கும் அமெரிக்கா..?
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவப் படைகளை வரும் 2014க்குள் திரும்பப் பெற்றுக் கொள்வோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் அமெரிக்காவுக்கு திரும்பி வருகின்றனர். போர் தளவாடங்களும் திரும்பி அனுப்பப்படுகின்றன. அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்த போது வான்வழியை உபயோகித்தது. தற்போது நாடு திரும்புவதற்கு பாகிஸ்தானின் கடல் வழி மற்றும் தரைவழியை தேர்ந்தெடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பலில் ஏற்றிவரப்பட்ட 50 கன்டெய்னர்களில் உள்ள ராணுவ தளவாடங்கள் கடந்த வாரம் கராச்சி துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இவை விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த போர் தளவாடங்களை ஏற்றி இறக்கும் பொறுப்பை பாகிஸ்தானில் உள்ள பிலால் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்திடம் அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. இந்த வாரத்தில் மேலும் பல கண்டெய்னரில் ராணுவ தளவாடங்கள் கராச்சி துறைமுகத்திற்கு வந்து சேரும் என அந்நிறுவன ஊழியர் ஒருவர் கூறினார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் சுமார் 60 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment