Header Ads



உலகின் மிகப்பெரிய முதலை மரணம்

பிலிப்பைன்ஸில் உள்ள முதலை சரணாலயமொன்றில் வளர்க்கப்பட்டு வந்த உலகின் மிகப்பெரிய முதலை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திச் சேவையொன்று அறிவித்துள்ளது. கடந்த வருடம் உலகக் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இம்முதலை நேற்று முன்தினம் குறித்த சரணாலயத்தில் உயிரற்ற நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக சரணாலய அதிகாரிகள் செய்தி நிறுவனத்துக்கு தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த முதலை 2011 ஆம் ஆண்டு செப். வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு பிலிப்பைன்ஸில் உள்ள முதலைகள் சரணாலயம் ஒன்றிற்கு கொண்டு வரப்பட்டு இம்முதலையின் நீளம் என்பன அளவிடப்பட்டன.

 இம்முதலை 6.4  மீற்றர் நீளத்துடன் காணப்பட்ட அதேவேளை இதன் எடை 1,075 கிலோ கிராமாகக் காணப்பட்டது.

குறித்த சரணாலய அதிகாரிகளால் லோலோங் என அழைக்கப்பட்ட இம்முதலை கடந்த ஒரு மாத காலமாக சரிவர உணவு, மருந்துகளைப் பெற்றுக் கொள்ளவில்லையென அந்நாட்டு மிருக வைத்தியரான அலெக் தெரிவித்தார். 

அத்துடன் கடந்த இரு வார காலப்பகுதியில் இம்முதலையின் சராசரி நடவவடிக்கையில் மாற்றங்கள் காணப்பட்டதுடன், இதன் முகம் மற்றும் வயிற்றுப்பகுதி ஒருவகை வீக்கத்துடன் காணப்பட்டதாக தெரிவித்தார். 

இம்முதலை சரணாலயத்துக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் காட்சிக்கு விடப்பட்டதுடன், குறித்த பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாக சரணாலய அதிகாரி கருத்து தெரிவித்துள்ள அதேவேளை  இம்முதலையின்  இறப்பு குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.