அமெரிக்கா செய்த அராஜகத்தின் சாட்சி..!
1945-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகாசாக்கி நகரங்களின் மீது அமெரிக்க போர் விமானங்கள் அணு குண்டுகளை வீசின. அணு குண்டுகளின் வெப்பம் தாங்காமல் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உடல்கருகி பலியாகினர். இச்சம்பவத்தினால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டும் முக அமைப்பு சிதைந்தும பலர் ஜப்பானில் வாழ்த்து வருகின்றனர்.
6.08.1945 அன்று காலை 8.15 மணியளவில் இந்த அணுகுண்டு வீசப்பட்ட போது, ஹிரோஷிமா நகரில் உள்ள தொலைபேசி தொடர்பகத்தில் பள்ளி மாணவியாக இருந்த மிசிக்கோ யமோக்கா என்பவர் தன்னார்வலராக பணியாற்றினார்.
தலைக்கு மேலே பறந்துச்சென்ற போர் விமானம் வீசிய ஆரஞ்சு நிறமான புதிய பொருளை பார்த்து அவர் அடைந்த ஆச்சரியம் அகலும் முன்னர், அந்த சக்தி வாய்ந்த அணு குண்டு வெடித்துச் சிதறியதில் அவரது முகம் சிதைந்து சீரழிந்தது. இதைப்போன்று முகம் சிதைந்திருந்த 25 இளம்பெண்களுக்கு ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் 1950-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் முகமாற்று ஆறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் குறித்து 1979-ல் பேட்டியளித்த மிசிக்கோ யமோகா, தனக்கு ஆபரேஷன் செய்து புதிய முகம் அளித்த டாக்டர் பெர்னார்ட் சைமன் என்பவரை 1995ம் ஆண்டு சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சில மாதங்களாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், தனது 82வது வயதில் கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார்.
Post a Comment