Header Ads



ஈரான் ரகசியமாக அணு ஆயுதம் தயாரிக்கிறது - செயற்கைகோள் புகைப்பட ஆதாரம்



சர்வதேச அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள ஈரான், ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ரகசிய இடத்தில் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்து வரும் ஈரான் அரசு, குறிப்பிட்ட சில இடங்களை சர்வதேச அணு ஆயுத கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்கும் தடை விதித்தது. இந்நிலையில், சமீபத்தில் கிடைத்த செயற்கைகோள் புகைப்படங்களின் மூலம் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு தேவைப்படும் புளோட்டோனியம் டெஹ்ரான் அருகே உள்ள ரகசிய இடத்தில் தயாரிக்கப்படுவதாகவும் அவற்றை தயாரிக்க திடநீர் சுழற்சி ஆலை செயல்பட்டு வருவது செயற்கைகோள் புகைப்படங்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.