Header Ads



'பௌத்தத்தின்படி மற்றொரு மதத்தை குறை கூறுபவன் புத்தரை குறை கூறுபவனாவான்'


(ஜே.எம்.ஹபீஸ்)

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டைப் பிரித்துக் கேட்கவும் மாட்டோம் எமக்கு அவ்வாறு பிரித்துத் தரவும் வேண்டாம் என்று கண்டி சிட்டி ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மவ்லவி பஸ்லுல் (மஹ்லரி) தெரிவித்தார்.

கண்டி மீராமக்காம் பள்ளியில் கண்டி முஸ்லிம்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த சுதந்திர தினவைபவத்தில்விசேட பேச்சாளராகக் கலந்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

கண்டி முஸ்லிம்களின் குடும்பப் பெயர்களில் சிங்களப் பெயர்களே உள்ளன. 'வைத்திய முதியான்ஸலாகே, வெதகெதா உடையார்லாகே, பட்டி முஹமதிரங்லாகே, பேல விதானலாகே' பட்டுப்பட்டியே ஆரச்சிலாகே,....' என்று ஆரம்பித்து தன் பின்தான் முஹம்மது களும் அப்துல்களும் வருகின்றன. இவை என்ன கடைச் சரக்கா? எமது பரம்பரைப் பெயர்கள். எனவே எமது பூர்வீகம் சிங்கள நாடு. நாம் அதனை கைவிடமாட்டோம்.

கடந்த 30 வருடம எமது நாடு சின்னா பின்னப்பட்டிருந்த போது எத்தனை முஸ்லிம்கள் நாட்டிற்காக உயித் தியாகம் செய்தனர். மேஜர் ஜெனரல் பஸ்லி லாபீர்(மடவளை) ஆகாய விமானத்தில் இருந்து குதிக்கும் போதே பரசுட்டில் வைத்தே அவர் உயிர் நாட்டுக்காகப் பிரிந்தது.

மேஜர் துவான் முத்தாலிப் (கலகெதரை) புலனாய்வு அதிகாரியாக இருக்கையில் சுட்டுக் கொள்ளப்பட்டார்.

இன்னும் எத்தனை பேர். புலனாய்வுப் பிரிவின் உயர் தரத்தில் அனேக மானவர்கள் முஸ்லீம்களாக இருந்தனர்.

கத்தான் குடிப்பள்ளி, ஏராவூர், அழிஞ்சிப் பொத்தானை,போன்ற தாக்குதல்களில் முஸ்லிமகள் உயிர் நீத்தார்கள். இவர்கள் ஏன் கொள்ளப்பட்டார்கள்? வடக்கைiயும் கிழக்கையும் இணைப்பதில் தடையாக இருந்த முஸ்லிமகளை ஒழிப்பதே இவர்களது திட்டம். எனவே வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லீம்களைப் போல் கிழக்கிலிருந்தும் முஸ்லீமகளை விரட்டி விட்டால் வடக்கையும் கிழக்கையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்ற திட்டமே இதற்கு அடிப்படையாகும். முஸ்லிம்கள் கேடயமாக இருந்து பயங்கரவாதிகளிடம் கிழக்கு பரிபோகாது பாதுகாத்து வந்தனர்.

இன்று புத்தர்களின் தேசிய கீதம் போல் அமைந்த புத்தங் சரனங்... என்ற பாடலின் சொந்தக்காரன் யார்? இவை அனைத்தும் இந்நாட்டு முஸ்லிம்கள் இந்நாட்டிற்குச் செய்த சேவைகளாகும். எனவே ஒருபோதும் நாம் இந்த நாட்டைப் பிரத்துக் கேட்க மாட்டோம் அப்படி நினைத்ததுமில்லை. நீங்கள் அப்படித் தரவும் வேண்டாம் என்று வீர முழக்கமிட்டார்.

இவ்வைபவத்தில் உரையாற்றிய மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கெப்பேகடுவ தெரிவித்ததாவது,

பௌத்த தர்மத்தின் படி மற்றொரு மதத்தைப்பற்றிக் குறை கூறுபவன் கௌதம புத்தரை குறை கூறுபவனாவான். இதனால்தான் இனவாதம் மதவாதம் என்பவற்றைத் தூண்டுபவன் பயங்கரவாதியை விட மோசமானவன் என்று ஸனாதிபதி தெரிவித்துள்ளார். அப்படி மதவாதம் இனவாதம் பேசுவோர் குழப்பத்தை தோற்று விக்க முயற்சிப்பவர்களை அவர்களது தரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலீஸாரை வேண்டுகின்றேன் என்றார்.
மேற்குலகு யுத்தம் மூலம் செய்ய முடியாமற் போனதை சமயப் பிரச்சினை மூலம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. ஊடகங்கள் இன்று எல்லை மீறிச் செயல் படுகின்றன. குழுக்களுக்கு இடையே பிரச்சினையை தோற்று விக்கும் செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாது என்றார்.

மௌலவி ராபி (புர்காணி) சமாதானத்திற்கும் முஸ்லிமகளின் பாதுகாப்பிற்குமாக வேண்டி பிராத்தனை ஒன்றையும் மேற்கொண்டார்.






1 comment:

  1. please convert this news in to sinhala or english, to understand sinhalese people.

    ReplyDelete

Powered by Blogger.