கருணாரத்ன ஹேரத் எழுதிய 'முஸ்லிம் நீத்திய' சிங்கள நூல் வெளியீட்டு நிகழ்வு (படங்கள்)
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் எழுதிய 'முஸ்லிம் நீத்திய' எனும் முஸ்லிம் சட்டம் தொடர்பான சிங்கள நூலின் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும், அதிதிகளாக சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாலித பெர்னாண்டோஈ உயர் நீதிமன்ற நீதியரசர் நீதிபதி சலீம் மர்சூப், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment