இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் தொடர்ந்து சதி நடவடிக்கைகள் - கோட்டா
இலங்கைக்கு எதிராக பல விதமான குற்றச்சாட்டுக்களை தோற்றுவிக்கும் புலம்பெயர் குழுக்கள், பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தனிப்பட்டவர்கள் அல்லது குழுக்களாக செயல்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ் விடுதலை புலிகள் தடைசெய்யப்பட்ட நாடுகளிலும், இவர்களது செயல்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் உபாயங்களுக்கான அமைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதி மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியினில், அரசியல் மற்றும் ராஜதந்திர சவால்கள் என்ற தொனிப்பொருளில் பாக்கிஸ்தானும் இலங்கையும் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.
வெளிநாடுகளுக்கு புகலிட கோரிக்கையை வைத்து அங்கு பிரஜா உரிமையினை பெற்றுக் கொண்டவர்கள், இன்று மனித உரிமைகள் தொடர்பாக முன்வைக்கும் வீரர்களாக தம்மை அடையாளப்படுத்துகின்றனர். அங்கு அவர்கள் பலம் வாய்ந்தவர்களாக செயல்பட்டு இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். அதற்கு அந்த நாடுகளும் துணைபோகின்றது.
இது தவிர, வெளிநாடுகளில் செயல்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அரசியலில் பலமான சக்தியாக மாறியுள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment