Header Ads



அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு



(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

அமெரிக்க காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் ஆசிய பசுபிக் வெளிவிவகார உபகுழு உறுப்பினருமான எனி பேலோமவக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை பத்தரமுல்லையிலுள்ள வடமாகாண ஆளுநர் உப அலுவலகத்தில் இன்று வியாழ்க்கிழமை (21) சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போது வடமாகாணத்தில் மேற்கௌளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதார செயற்திட்டங்கள் குறித்து ஆளுநரினால் விளக்கி கூறப்பட்டது.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் அமெரிக்க காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருக்கு வடமாகாணம் சம்பந்தமான     புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. இந்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனம் கலந்து கொண்டார். 



No comments

Powered by Blogger.