மன்னார் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எப்போது கிட்டும்..?
(முசலியான் எஸ்.எச்.எம்.வாஜித்)
மதத்தலைவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். காரணம் அவர்கள் மக்களை மதரீதியிலும் நல்லொழுக்க ரீதியிலும் வழிநடாத்துகின்றனர். மாறாக அவர்களே மக்களை மதவாதம் இனவாத பாதையில் இட்டுச்சென்றால், 'ஒரே சமுதாயம் ஒரே தேசம்' என்ற அதிமேதகு ஜனாதிபதியின் கொள்கைக்கு வேட்டு வைப்பதாக அமைகிறது. சமுதாயம் பிளவுபடுகின்றது. இவ்வாறான சமுதாய சீர்கேட்டிற்கு மன்னார் ஆயரும் பதில் சொல்லவேண்டிய நிலையிலுள்ளார்.
நாம் சற்று 23 வருடங்கள் முன்னோக்கிப் பார்த்தால், அன்று இந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை எங்கிருந்தார். அன்று LTTE யினால் வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றிய மனித உரிமை மீறலை எதிர்த்தோ, அவ்வப்பாவி மக்களின் அசையும் அசையாச் சொத்துக்கள் இரக்கமிண்றி மனித வெறிகொண்டு சூரையாடிதையோ இந்த ஆயர் தட்டிக்கேட்காவிட்டாலும் ஒரு அனுதாபச்செய்தியேனும் விடுத்திருந்தாரா? அன்றுதான் தவறிவிட்டார் இன்றுவரை முஸ்லிம்களின் பிரச்சினைகள் சம்மந்தமாக ஏதேனும் ஒரு சாதக நடவடிக்கையேனும் எடுத்ததாக எந்தவொரு தகவல் ஊடகத்திலும் காணக்காணோம்.
2013-02-20 பத்திரிக்கையின் முன்பக்க செய்தி யாவரது கண்களையும் அகலச்செய்தது. மன்னார் மாவட்ட ஆயரும் இன்னும் சில மதத்தலைவர்களும் கையொப்பம் இட்டு ஜ. ந. மனித உரிமை ஆணையகத்திற்கு அனுப்பி வைத்த தகவலான 'இலங்கைகைக்கு எதிராக ஜ. ந. மனித உரிமை ஆணையக்குழுவினால் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்' என மீண்டும் மீண்டும் குப்பை கிளறுகிறார் ஆயர். இது மட்டுமல்லாமல் சில மாதங்களுக்கு முன்பும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறுபட்ட குற்றசாட்டினை முன் வைத்து அவுஸ்ரேலியா அரசாங்கத்திற்கு கடித்தினை அனுப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
30வருடகால யுத்தமீழலில் தம் தாய்மண்ணில் குடியேறுறிவரும் மக்களை வரவேற்று ஆதரிக்க வேண்டிய தார்மீக வேளையில் மீண்டுமொரு சிற்றினக் கலவரத்தையேற்படுத்தி பேரினவாத்திடம் தன்னை போற்றிக்கொள்ள நினைக்கும் இவ் ஆயர் ஏன் தன் தாயகத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு மாட்டிக் கொடுக்கிறாரோ தெரியவில்லை.
இந்த மதத் தலைவர் மன்னார் முஸ்லிகளுக்கு எதிராக கிறிஸ்தவ, தமிழ் சமூகங்களுக்கிடையே இனவாதக் கருத்துக்களை பரப்பி, சமூகங்களை முரண்பட செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருப்பதை கிறிஸ்துவ திருச்சபை கவனத்தில் கொள்ளவேண்டும்.
மன்னார் முஸ்லிகளுக்கு எதிராக மாற்றுச் சமூகத்தை தூண்டிவிடும் பொருட்டு
1. முஸ்லிம்களுக்கு காணிகளை விற்கக் கூடாது.
2. முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடக் கூடாது.
3. மீன் பிடித்துறைமுகங்கள், மீன் பிடி உபகரணங்கள் வழங்கக் கூடாது.
4. அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்படும் நிவாரணம் வழங்கப்படக் கூடாது.
5. அரச வேலை வாய்ப்புகள் வழங்க கூடாது.
6. இது போன்ற இன்னும் பல பிரச்சினைகளை மன்னார் முஸ்லிம்களுக்கு கொண்டுக்க நினைக்கும் இந்த கிறிஸ்தவ மதகுரு இயேசுநாதருக்கே முரணாக செயற்பட்டு வருகிறார்.
இந்ந ஆயரும் தமிழ்த் தேசிய தலைவர்களும் பல நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். என்பது இந்த உலகம் அறிந்த விடயம் மன்னார் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எப்போது கிட்டும்?.
Ippadiyana karthugal mulam than mannar muslim kaduku vidiu hidaikum
ReplyDelete