Header Ads



சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக வி.கிருஷ்ணமூர்த்தி..?



சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக சிரேஷ்ட இராஜதந்திரியான வி.கிருஷ்ணமூர்த்தியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இராஜதந்திர சேவையில் 33 வருட அனுபவம் கொண்ட இவர், தற்போது சார்க் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வருகின்றார். சென்னையிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பிரதி உயர் ஸ்தானிகராக இறுதியாக வி.கிருஷ்ணமூர்த்தி கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசானா நபீகிற்கு கடந்த ஜனவரி 9ஆம் திகதி சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான தூதுவர் அஹமட் ஜவாத், இலங்கை அரசாங்கத்தினால் மீளழைக்கப்பட்டார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சிரேஷ்ட இராஜதந்திரியான வி.கிருஷ்ணமூர்த்தியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. tm

2 comments:

  1. இஸ்லாமிய ஸரிஹ் சட்டத்தை அரைகுறையாக கடைப்பிடிக்கும் சவூதி நாட்டுக்கு முஸ்லிம் அல்லாத ஒருவரை இலங்கை தூதுவராக நியமிப்பது சாலச்சிறந்தது.
    ஏனனில் சவூதி அரசுடன் இரு சட்டங்களுடனும் ( இஸ்லாமிய ஸரிஹ் & சர்வதேச சட்டங்கள் மூலம்) தொடர்பை பேண வேண்டியுள்ளது.
    சவூதி அரசாங்கத்தின் சட்டம் இஸ்லாமிய ஸரிஹ் சட்டத்தின் "மஹ்ரம்" தொடர்பில் எவ்வாறு நடந்துகொள்கிறது ?
    பணிப்பெண்களை வேலைக்கமர்த்துவது தொடர்பில் இஸ்லாமிய ஸரிஹ் ரீதியிலான‌ மஹ்ரம் சவூதி அரசாங்கத்தின் சட்டத்தில் இல்லையா ?
    இஸ்லாமிய மஹ்ரம் சட்டம் மீறப்பட்டு இஸ்லாமிய கொலைக்கு கொலை சட்டம் நிறைவேற்றப்படலாமா ?
    ரிஸானா நஃபீக் அவர்களின் விடயத்தில் இவற்றை பார்ப்பது நமது கடமையல்லவா ?
    இது போல் சவூதியின் (இஸ்லாமிய) ஸரிஹ் சட்டம் சவூதியில் உள்ள அமெரிக்கர்களுக்கு அமுல்படுத்தமுடியாதா ?
    போன்றவற்றை சவூதி அரசாங்கத்திடமும் சவூதி நீதி மன்றத்திலும் கேட்க இவ்வறான நியமன‌ம் பொருத்தமானது.

    ReplyDelete
  2. இவ்வழவு காலமும் ஒரு முஸ்லிம் நபர் இலங்கை தூதுவராக இருந்து யாருக்கும் எதையும் சாதிக்கவில்லை. ஆகையால் ஒரு நன் முஸ்லிம் அமர்த்தினால் அதை விட நன்கு தொளிலுக்கு கண்ணியம் கொடுத்து இலங்கை சவுதி வாழ் மக்களுக்கு நன்மை பயக்க பணி செய்வான். முஸ்லிம் தூதுவர் என்றால் அவோ அவர் ஒரு முஸ்லிம் என்ற தலக்கணத்தோடு சும்மாவே நாற்காலியை பாழாக்கி இங்கு சவுதியில் வாழும் மக்கழையும் நசமாக்குவர். ஆக, கிருச்னமூர்த்தியின் நியமனத்தால் சவுதியில் உள்ள எல்லா மக்களும் நன்மை அடையவர்.

    அப்துல் கரீம் புலம்புவது போல் சரீஆ சட்டத்துக்கும் இவரின் நியமனத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ரிசானாவின் மரணத்தால் முன்னால் ஜாவாத் திருப்பி அழைக்கப்பட்டார் என்பதும் வெறும் பொய். ஜாவாத் போன்றவர்கள் இன்னும் இங்கு இருந்து எந்த பிரயோசனமும் நம்மக்களுக்கு கிடய்காது.

    ReplyDelete

Powered by Blogger.