காத்தான்குடியில் வெளிநாட்டு பணிப்பெண்களாக தொழில் புரிபவர்களின் விபரம் திரட்டல்
வெளிநாடுகளில் பணிப்பெண்களாக தொழில்புரியும் பெண்கள் பற்றிய விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையினை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் விசேடமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவமொன்றின் மூலம் பள்ளிவாசல்களினால் இந்த தகவல்கள் சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக காத்தான்குடியையும் அதனை சூழவுள்ள கிராமங்களில் இருந்தும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களின் காரணங்களை கண்டறியப்படவுள்ளது. இதனை தொடர்ந்து சம்மேளனத்தின் கூட்டு ஸக்காத் திட்டத்தின் ஊடாக பல்வேறு உதவிகள் வழங்கப்படவுள்ளது.
காத்தான்குடியிலிருந்து வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக செல்பவர்கள் குறைவாக காணப்பட்ட போதிலும் வெளிநாட்டில் தொழில்புரியும் இந்த பிரதேச பெண்கள் பற்றிய விபரம் ஒன்றினை சேகரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே சேகரிக்கப்படுகின்றது.
சவூதி அரேபியாவில் பணிப்பெண் ரிஸானா நபீகிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்னர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தில் இடம்பெற்ற பள்ளிவாயல்களின் நம்பிக்கைப் பொறப்பாளர்களுடனான கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
Post a Comment