பௌத்த சமயத்தில் இனவாதத்திற்கு இடமில்லை - லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.
(ஜே.எம்.ஹபீஸ்)
இலங்கையின் இறுதி அரசன் விஜயராஜசிங்கன் என்ற தமிழ் இயற் பெயர் கொண்ட ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனாகும். ஆனால் இன்று எமது மக்கள் பௌத்த கோட்பாடுகளை மறந்து தன்னிச்சையாக நடந்து கொள்வதன் மூலம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகளை நிறைவேற்றுவதற்கு முக்கிய காரணியாக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இன்று 25-02-2013 கண்டி அங்கும்புற பிரதேசத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களது முயற்சியாலும் நிதி உதவியாலும் அங்கும்புற பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சன சமூக நிலையம் ஒன்றை திறந்து வைத்த பின் அவர் அங்கு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.இங்கு தெரிவித்ததாவது,
இன்று எமது நாட்டில் ஒரு சிலர் இன வாதத்தை பரப்ப முயற்சித்துக் கொண்டுள்ளனர். ஆனாலும் பௌத்த சமயத்தில் அதற்கு இடம் இல்லை. அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்குமாறு பௌத்த மதம் கூறுகிறது. அதே போல் எமது நாட்டின் அரசியல் யாப்பும் பௌத்த மதத்திக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் மற்றைய மதங்களை பாதுகாப்பதாகவும் கூறுகிறது. தற்போது சிலரால் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் பௌத்த சமயத்திற்கும், அரசியல் யாப்பிற்கும் முறனானதாகும்.
பண்டைய காலத்து சிங்கள மன்னர்கள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கிய போதும் மற்றைய மதங்களையும் கௌரவித்தனர். கரையோரப் பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் விறட்டபட்ட போது அப்போதைய கண்டிய அரசனஅவர்களை மலையகத்தில் குடியேறும் சந்தர்ப்பங்களை வழங்கினர். முஸ்லிம்களை கிழக்கு மாகாணத்தில் குடியேற இடம் அளித்தார்.
இலங்கையின் கடைசி சிங்கள மன்னன் ஸ்ரீ நரேந்திரசிங்க மன்னர் ஆவார். அவருக்கு மகன்மார் இருக்காததன் காரணமாக அவருக்கு பின்னால் புதிய அரசரை தெரிவு செய்வதில் சிக்கள்களை எதிர் நேர்க்கினர். அவர் மனந்திருந்த மகாராணி இந்தியாவை சேர்நத தமிழ் பெண்ணாகும். இன்நிலையில் இருவருடைய பெயர்கள் அடுத்த மன்னர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டது. ஒருவர் இ நாட்டு சிங்களவரும் ஸ்ரீ நரேந்திரசிங்க மன்னனின் உறவினருமான உனம்புவே பண்டார வும் மற்றவர் தமிழரான மஹாரானியின் சகோதரர் விஜயராஜசிங்கவும் பிரேரிக்கப்பட்டனர். அமைச்சரவை சிங்களவரான உனம்புவே பண்டாரவுக்கு அரசாட்சியை வழங்க தீர்மானித்தது. இருந்த போதும் அன்றைய அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகள் தமிழராக இருந்தாழும் தனது 10 வயது முதல் மல்வத்தை விஹாரையில் வளர்ந்த விஜயராஜசிங்கவை அரசனாக்க வேண்டும் என்று கூறினர். அவர் பௌத்த மதத்தை ஏற்றிருந்ததால் அன்றை இச்சமபவம் இனத்தை விட மதத்துக்கே முன்னரிமை வழங்கியுள்ளமையைக் காட்டுகிறது. அதன் பிரகாரம் இலங்கையின் இருதி மன்னராக விஜயராஜசிங்க ஸ்ரீ விக்கிரமராஜசிங்க என்ற பெயரில் ஆட்சி புரிந்தார்.
1948 ம் ஆண்டு முதல் பல அரசுகள் இந் நாட்டை ஆட்சி செய்துள்ளன. அவர்கள் அனைவரும் நாட்டின் கௌரவத்தை பாதுகாத்தனர். எமது நாட்டிக்கு எதிராக எவ்வித பிரேரனையும் வெளிநாடுகளில் நிறைவேற்றப்பட வில்லை. ஆனாலும் கடந்த வருடம் மார்ச் மாதம் எமது நாட்டுக்கு எதிரான பிரேரனை நிறைவேற்றப்பட்டது. இவ்வருடமும் ஒரு பிரேரனை நிறைவேற்றப்பட உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் பௌத்த கோட்பாடுகளை மறந்து தன்னிச்சையாக நடந்து கொள்வதாகும். 75 சதவீதமானோர் பௌத்தர்களாக இருந்த போதும் 25 சத வீதம் இங்கு சிறுபான்மையினர் வாழ்கின்றனர். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இந் நிலையை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்காததே இவ்வாரன பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எம்.பீ.த அல்விஸ், சாந்தினீ கோன்கஹகே, சித்திரா மன்திலக்க ஆகியோர் இங்கு உரையாற்றினர். புதிதாக திறக்கப்பட்ட சன சமூக நிலையத்திற்கும் புத்தர் சிலை ஒன்றும் வைக்க்ப்பட்டது.
Post a Comment