பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் நவீன முறையிலமைந்த கற்பித்தல் வகுப்புக்கள்
(எஸ்.எல். மன்சூர்)
கற்றல் கற்பித்தல் நவீனத்துவமானதாகவும், தேர்ச்சியமையக் கலைத்திட்டத்துடன்கூடிய மாணவர் செயற்பாடுகள் ஒருங்கே அமைந்ததுமான கற்றல் முறைகள்தான் இன்றைய பாடசாலைக் கல்வித்திட்டமாகும்.
அதன் அடிப்படையில் அக்கரைப்பற்று வலயத்திலுள்ள பல பாடசாலைகளில் இத்திட்டம் நடைபெற்று வருகின்றமை ஒரு கல்வி அபிவிருத்திக்கான அத்திவாரமாகப் பார்க்கப்படுகின்றது. வலயத்தின் சிறப்பாக கல்வியதிகாரிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பாடசாலை வெளிவாரி மதிப்பீட்டுத் திட்டமானது அக்கரைப்பற்று வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளரது சிறந்த முகாமைத்துவத்தினதும், ஆலோசனையினதும் அடிப்படையில் கிழக்குமாகாணத்தில் சிறப்பான முறையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்குக் காரணமாக இருக்கின்ற நவீன கற்பித்தல் முறைகளை மாணவர்களுக்கு வழங்குவதில் முன்னணியில் இருக்கின்ற சிறந்த வளவாளர்களாகவும், ஆலோசகர்களாகவும் கல்விப் பணிப்பாளர்களது அயராத அர்ப்பணிப்பும் ஒருகாரணமாகும்.
இதற்கமைவாக அக்கரைப்பற்று வலயத்தின் அட்டாளைச்சேனைக்கோட்டத்திலுள்ள பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தின் வெளிவாரி மதிப்பீடுகள் கடந்த 05.02.2013 அன்று நடைபெற்றபோது கல்வியதிகாரிகள் முன்னிலையில், ஆங்கில ஆசிரியர் தரம் பத்து வகுப்புக்கான ஆங்கில பாடத்தை கணனிக் கூடத்தில் மாணவர்களுக்கு கற்பிப்பதையும், அக்கரைப்பற்று வலயத்தின் ஆங்கிலக் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளரான பீ.எம். அபுல்ஹஸன், ஆசிரிய ஆலோசகரான ஐ.எல்.எம்.இப்றாகீம் ஆகியோர் பார்வையிடுவதையும், அதேபாடசாலையின் தரம் 3 மாணவர்கள் தங்களது சுயமான கற்றலை வகுப்பறையிலிருந்து மேற்கொள்வதையும் படங்களில் காணலாம்.
Msaha allah namma Ak/ Al hidaya Vidyalayam Menmelum Develop Akanum
ReplyDelete